Sunday, November 11, 2018

************கள்ளர் குல மன்னர்************

*****கட்டலூர்,பெரம்பூர் நரசிங்க தேவர்*****
புதுக்கோட்டை மாவட்டத்தின் எல்லைப்பகுதியான விராலிமலையில் உள்ள ஊர்களான கட்டலூர்,பெரம்பூர் ஊரை மையமாக கொண்டு சோழர்,பாண்டியர் காலம் முதல் பிரிட்டீஸ் ஆரம்ப காலம் வரை ஆட்சி புரிந்த கள்ளர் குல சிற்றரசர்களை நாம் இப்போது காணலாம்.
சங்க இலக்கியமான புறநானூறில் குறிப்பிட்ட ஆவூர் கிழார் பாடல்களில் வரும் ஆவூர் இந்த பெரம்பூர்,கட்டலூர் சிற்றரசர்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி தான்.
இந்த கள்ளர் குல சிற்றரசர்களை பற்றி முறையான கல்வெட்டுகள் கிபி1391ஆம் ஆண்டில் கிடைக்கப்பெருகிறது. அந்த கல்வெட்டுகளில் பெரம்பூர் அரசர்கள் என்றே குறிக்கப்பட்டுள்ளது.
முதல் கல்வெட்டில் சிவன்கோவில் தெற்கே பொரித்துள்ள வாசகப்படி பெரம்பூர் அரசு நரசிங்க தேவன் என குறிக்கப்படுகிறது.
இரண்டாவது கல்வெட்டில் குன்னாண்டார் கோவிலில் பொரிக்கப்பட்ட வாசகப்படி சோழவளநாட்டு வடகோனாட்டு பெரம்பூர் அரசு அடைக்கலங்காத்தவனான நரசிங்க தேவன் என குறிக்கப்படுகிறது.
இப்படியாக சோழர் காலம் தொட்டே பெரம்பூர் அரசை அரசாண்ட கள்ளர்குல சிற்றரசர் நரசிங்க தேவன் வழியினர்.
பிற்காலத்தில் திருமலை நாயக்கர் காலத்தில் சோழர்கள்,பாண்டியர்கள் வீழ்ச்சிக்கு பின்பு அரசர் இடத்தில் இருந்து பாளையக்காராக மாற்றப்படுகிறார்.
இந்த கள்ளர்குல நரசிங்க தேவன் வழியினர் கிபி1686ஆம் ஆண்டு மத நல்லிணக்கத்திற்காக கிறித்துவர்களுக்கு தேவாலயம் அமைக்க ஆவூர் பகுதியில் அனுமதி கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை சமகாலத்தில் வாழ்ந்த ஒரு பாதிரியார் கட்டலூர்,பெரம்பூர் கள்ளர் அரசர் ஆவூரில் தேவாலயம் கட்ட அனுமத்தித்தார் என குறித்துள்ளார்.
மேலும் இச்சம்பவம் புதுக்கோட்டை அரசு ஆவணத்திலும் பதிவாகியுள்ளது.
பிற்காலத்தில் இந்த பகுதி குளத்தூர் தொண்டைமானின் ஆளுகைக்கு உட்படுகிறது.
பின்பு கிபி 1716ல் சொக்க நாத நாயக்கருக்கும்,குளத்தூர் தொண்டைமானுக்கும் ஏற்பட்ட போரில் நாயக்கர் படைகள் ஆவூரில் உள்ள தேவாலயத்தில் பதுங்கிய காரணத்தால் தொண்டைமானாரின் கள்ளர் படைகள் நாயக்கர் படையை விரட்டி,தேவாலயத்தையும் இடித்து தரைமட்டமாக்குகிறார்கள்.
இந்த சம்பவம் மத நல்லிணக்கத்தை விரும்பிய குளத்தூர் தொண்டைமானார் மனவருத்தமுற்று
மீண்டும் தேவாலயம் கட்ட இடமும்,அனுமதியும் அளிக்கிறார்.
இன்று கள்ளர் குல நரசிங்க தேவனின் ஆட்சிப்பகுதிகள் விராலிமலை சட்டமன்ற தொகுதியாக உள்ளது.
இந்த சட்டமன்ற தொகுதியில் கள்ளர் இனத்தை சேர்ந்த அமைச்சர் சி.விஜய பாஸ்கர் மழவராயர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
அன்றும்,இன்றும்,என்றும் இப்பகுதி கள்ளர் தலைவர்களின் ஆளுமைகளுக்கே கட்டுப்பட்ட கள்ளர் நாடாக உள்ளது.
மேலும் இங்கு புகழ்பெற்ற கள்ளர் நாட்டார்களால் நடத்தப்படும் தென்னலூர் ஜல்லிக்கட்டும் இங்குதான் நடைபெருகிறது👍
குறிப்பு: கெளலிகள் கண்களுக்கு இன்னும் இந்த மன்னர் புலப்படவில்லை😂
நன்றி
Saints,Goddess and kings by Dr.Susan Bally
Gazetteer of Tamilnadu Pudukottai
Tamilnadu archaeological department
மற்றும்
திரு.சியாம் சுந்தர் சம்மட்டியார்
திரு.சுதாகர் சம்மட்டியார்
அன்புடன்
சோழபாண்டியன்
ஏழுகோட்டை நாடு

Image may contain: 1 person
Image may contain: textImage may contain: textImage may contain: textImage may contain: text

No comments: