Saturday, November 10, 2018

,,,,,,,,,,,,,,,,,,,#கண்ணீர்_அஞ்சலி, ,,,,,,,,,,,,,,,


Image may contain: 3 people, people standing
நான் சிலமுறை ஐயா.பொன்னு அவர்களை பார்த்துள்ளேன். நான் சிறு வயதில் கமுதியில் முடிவென்ற சென்ற போது முதன்முதலாக பார்த்து வியந்து போனேன். அவர் கையில் தேவரின் படத்தை பச்சை குத்தியிருந்தை பார்த்து. எனக்கு முடிவெட்டியவர் அவர் தான்.
அவரது கடையிலும் தேவரின் படத்தை மாட்டியிருப்பார். நான் சமிபத்தில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் இயக்கத்தில் சேர்ந்த பின் சில மாதங்களுக்கு முன் ஐயா.பொன்னு அவர்களை மீண்டும் பார்த்துள்ளேன். அப்போது பசும்பொன் தேவரை பற்றி குறிப்பிடும் போதெல்லாம் தலைவர் என்ற வார்தையை மட்டும் குறிப்பிடுவார். தலைவர்களிலே இவர் ஒரு மகான் என தேவரை புகழ்வார்.
இராமநாதபுரம் மாவட்டம், கமுதி தாலுகா, புதுக்கோட்டை கிராமம் தான் இவரது பூர்வீக கிராமம். ஐயா. பொன்னு அவர்கள் இளம் வயதிலேயே பசும்பொன் தேவரின் மேடை பேச்சுகளால் கவரப்பட்டு பார்வர்ட் பிளாக் இயக்கத்தில் இணைந்தவர். அதன்பின் இன்று தான் மறையும் வரையிலும் தன் வாழ்நாள் முழுவதும் தேவர் திருத்தொண்டராகவே பார்வர்ட் பிளாக்கில் இருந்தவர். இயக்கத்திற்காக பல போராட்டங்களில் கலந்துகொண்டவர். இலங்கை தமிழர்களுக்காக இந்தியாவில் முதன்முதலில் குரல் கொடுத்த இயக்கமான பார்வர்ட் பிளாக் இயக்கத்தின் தீவெட்டி போராட்டத்திலும் ஐயா.பொன்னு அவர்கள் கலந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்.ஜி.ஆர். ஒருமுறை பசும்பொன் வந்த போது ஊரில் மின்சாரம் இல்லாததால் , ஐயா.பொன்னுசாமி அவர்கள் ஒரு பனையோலையில் செய்த விசிறியை எடுத்து வந்து எம்.ஜி.ஆருக்கு வீச தொடங்கினார் . அந்த விசிறியை கொடு நீ வீச வேண்டாம் நானே விசிறிக்கொள்கிறேன் என எம்.ஜி.ஆர் அவர்கள் சொல்ல ஏன் ஐயா நான் என் கையால் விசிற வேண்டாம் என்கிறீர்கள் என கேட்க, அதற்கு எம்ஜிஆர் பசும்பொன்னார் மீது மதிப்பு வைத்துள்ள நீங்கள் பசும்பொன்னாரின் திருவுருவ படத்தை கையில் பச்சை குத்தியுள்ளீர்கள், நீங்கள் அந்த கையில் விசிறுவது எனக்கு அந்த பசும்பொன் திருமகனே விசுறுவது போல சங்கடமாக உள்ளது என கூறிய எம்.ஜி.ஆர். பின்பு விசிறியை ஐயா.பொன்னு அவர்களிடம் பெற்று தானே வீசினார் என்பது வரலாற்று நிகழ்வு.
இப்பேர்ப்பட்ட தேவரின் திருத்தொண்டர். இன்று (11-11-2018 )மதுரையில் தனியார் மருத்துவனையில் காலமானர். அவரது உடல் இன்று மாலை கமுதி கோட்டைமேட்டில் உள்ள தேவர் சிலை அருகே உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. தேவர் திருமகனின் திருத்தொண்டருக்கு நாம் அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்துவோம். நாளை 12-11-2018 ல் அவரது உடல் ஊர்வலமாக சென்று அடக்கம் செய்யபட இருக்கிறது.
வருத்தத்துடன்
அகில இந்திய பார்வர்ட் பிளாக்
இராமநாதபுரம் மாவட்டம்

No comments: