Monday, November 30, 2015

நடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு முழங்காலில் ஆபரேஷன் நடந்தது.

முழங்கால் வலி
நடிகர் கார்த்திக் ஒரு மாதமாக முழங்கால் வலியால் அவதிப்பட்டார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் ஆபரேஷன் செய்துகொள்ளும்படி அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
...
டாக்டர்கள் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்தனர். ஆபரேஷனுக்குப் பிறகு கார்த்திக் நலமுடன் இருப்பதாக அவரது மகனும் நடிகருமான கவுதம் கார்த்திக் தெரிவித்தார். விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறினார்.
முன்னணி கதாநாயகன்
கார்த்திக் 1980 மற்றும் 90-களில் தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். இவர் அறிமுகமான படம் ‘அலைகள் ஓய்வதில்லை.’ தொடர்ந்து 130-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ‘நினைவெல்லாம் நித்யா, மவுன ராகங்கள், அக்னி நட்சத்திரம், வருஷம் 16, கிழக்கு வாசல், அமரன், பொன்னுமணி, உள்ளத்தை அள்ளித்தா,’ உள்ளிட்டவை கார்த்திக்கின் முக்கிய படங்கள்.
சமீபத்தில் வெளியான தனுசின் ‘அனேகன்’ படத்தில் வில்லனாக வந்தார். தற்போது அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
2006-ல் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்து அரசியலில் குதித்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி 2009ல் நாடாளும் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.
See More

Gautham Karthik rubbishes rumours about his father's health condition

Rumours about health problems of senior celebrities keep surfacing quite often. This time it was about veteran actor Karthik. It was said that Karthik was rushed to hospital on November 28 due to some serious heart problems.
The rumour went viral on social media, and many concerned people on Twitter had approached Karthik's son Gautham Karthik about the Navarasa Nayagan's health.
Gautham took to Twitter to rubbish the rumours. He has claimed that it was a regular health check up and his dad is indeed fine.

Karthi, who has acted more than 133 films, was last seen in Dhanush's Anegan. Karthik made a comeback as villain in that film after a long gap.

Sunday, November 22, 2015

இளைய பசும்பொன் திரு.இரமேஸ் அவர்களை பற்றி சிறு குறிப்பு :-

இவரது பூர்விகம் மதுரை ஆகும் , காலச்சூழ்நிலை காரணமாக தனது இளம்வயதிலேயே விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் குடும்பத்துடன் குடிபெயரந்துவிட்டார்..!
தான் பிறந்த சமுதாயத்திற்கு நல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் இளம்வயதிலிருந்தே இருந்துவந்தது..!
தன்னால் இயன்ற வகையில் மக்களுக்கு நற்பணிகள் பலவற்றை செய்துவந்தார்..!
அ.இ.அ.தி.மு.க-விலே ஆரம்ப கட்டத்தில் அரசியலை நன்கு கற்றுக்கொண்டார்..!
அதிமுக-வால் தேவரினத்திற்கு.நன்மை ஏதும் இல்லை , முக்குலத்திற்கு எதிராக செயல்படுகிறது என்பதை உணர்ந்தவுடன் ,
அதிமுகவிலிருந்து விலகி முக்குலத்தோரை ஒருங்கிணைக்கும் அகில இந்திய தேவர் கூட்டமைப்பில்(AIDG) இணைந்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்..!
மேலும் இவரை விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக AIDG அறிவித்து கெளரவப்படுத்தியது..!
சமுதாயம் எங்கு பாதிக்கப்பட்டாலும் உடனே குரல் கொடுப்பார் , முடிந்தளவு அமைப்பு பாரமால் களப்போராட்டங்களில் கலந்துகொள்வார்..!
முடியாத பட்சத்தில் கண்டன சுவரொட்டிகள் மூலம் தனது எதிர்ப்பினை வலுவாக பதிவு செய்யும் வல்லமைபடைத்தவர்..!
யாரிடமும் இதுவரை தேவர் அய்யாவின் பெயரை சொல்லி வசூல் செய்ததில்லை , நன்கொடையும் பெற்றதில்லை..!
தனது சொந்தப்பணத்தில் தான் துரிதமான களப்பணி ஆற்றி வருகிறார்..!
எந்த வித பிரதிபலனையும் எதிர்பாரமால் துணிச்சலோடு களம் காண்பார்..!
இவர் ஒருநாளும் தான் தேவர் என்றும் , தேவரின் மறுஉருவம் என்றும் சித்தரித்தது கிடையாது , மேடைகளில் பேசியதும் கிடையாது.
இனத்தின் முன்னேற்றத்திற்காக திருமணம் செய்துகொள்ளமால் , துறவற வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார் இன்றளவும்..!
மற்ற சமுதாய மக்களுடன் ஓர் நல்லிணக்க உறவுடன் பழகும் தன்மை கொண்டவர்..!
உடல்நலக்குறைவால் அவதியுற்ற போதும் , தேவர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டார்..!
30 க்கும் மேற்பட்ட தேவர் திருமகனாரின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து , இறுதியில் மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தார்..!
(30-10-15)
தீயபழக்க வழக்கங்கள் ஏதும் இன்றி ஓர் பொதுநலவாதியாகவே வாழ்ந்து வருகிறார்..!
இனத்தின் முன்னேற்றமே தனது முன்னேற்றம் என்ற கொள்கையின் அடிப்படையில் அரசியல் பணியாற்றி வருகிறார்..!
இது ஓர் சிறுகுறிப்பு மட்டுமே., இவருக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு..!
முக்குலமே சிந்திக்க வேண்டிய நேரம் இது..!
மாற்றம் ஒன்றே நம் சமுதாயத்திற்கு நிரந்தர தீர்வு என்பதை உணர்ந்த செயல்பட்டால் நன்றாக இருக்கும்..!
மாற்றுவோம்..!
மாற்றி அமைப்போம்..!

Saturday, November 21, 2015

கள்ளர் கல்வி கழக நிர்வாகக்குழு தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்

உசிலம்பட்டி கள்ளர் கல்வி கழகத்தின் நிர்வாகக்குழு தேர்தல் வரும் 29-ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றுமாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் அதிகாரி ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தெரிவித்துள்ளார். 

உசிலம்பட்டி கள்ளர் கல்வி கழகத்துக்கு தலைவர், செயலர், பொருளாளர் மற்றும் 13 நிர்வாக குழு உறுப்பினர்கள், சங்கத்தின் பொதுக்குழு உறுப்பினர்களால் ஓட்டுப்பதிவு முறையில் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
 தலைவர் பதவிக்கு பி.கே.எம். செல்லக்கண்ணன், பி.சின்னிவீரன், எம்.ஜெபமணி, எஸ்.மாசாணம் மற்றும் கே.ஏ. முருகன் ஆகியோரும், செயலர் பதவிக்கு பி.பாலசுப்பிரமணியன், ஓ.சின்னசாமி, பி.கல்யாணசுந்தரம், பி.பாண்டியன் ஆகியோரும், பொருளாளர் பதவிக்கு ஓ.சந்திரன், ஏ.தேவராஜன், டி.மணிகண்டன், மஞ்சு கணேஷ், திலகர் ஆகியோரும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 57 பேரும் போட்டியிடுகின்றனர். 

நவம்பர் 29-ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். அன்று மாலை 5.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தெடங்கும். 

 வாக்களிக்க வரும் உறுப்பினர்கள் அவர்களின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையுடன் வரவேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். 

 தேர்தலில் பிரச்னை ஏற்படுத்தும் உறுப்பினர்கள் காவல்துறையினர் மூலம் வெளியேற்றப்படுவர். தலைவர், செயலர், பொருளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் மட்டும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்திற்கு அனுமதிக்கப்படுவர்.
தேர்தலன்று கல்லூரி வளாகத்திற்குள் யாரும் பிரசாரத்திலோ வாக்கு சேகரிப்பிலோ ஈடுபடக்கூடாது, என தேர்தல் அதிகாரி பத்மநாபன் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீவைகுன்டம் இன்ஸ்பெக்டரின் அதிகார துஷ்பிரோகத்தை கண்டிக்கிறோம் ----------------------------

தாமிரபரணி தூர்வா௫ம் பணியில் உள்ள முறைகேடுகளை தட்டி கேட்கும் எண்ணம் உள்ளவரை ஓ௫ங்கினைத்தது தவறா? ஶ்ரீவைகுன்டம் காவல்துறை ஆய்வாளர் தி௫ வெங்கடேசன் பசும்பொன் இரத்த தான கழக நிறுவன௫ம், தாமிரபரணி அனை தூர்வா௫ம் பணி மேம்பாட்டுக்குழு ஓ௫ங்கினைப்பாளரான புதுக்குடி எம் எஸ் ராஜா மீது பொய் வழக்கு பதிவு செய்ய துடியாய் துடிப்பது ஏன் ?யாராவது ஓ௫வரை தயார் படுத்தி வழக்கு போட நினைக்கும் மர்மம் என்ன? மணல் கோரியிடம் பணம் வாங்கிய விசுவாசமா? அரசு அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக வீடு கட்டும் மு௫கனிடம் பணம் வாங்கிய பாசத்திலா? அதிகார வர்க்கத்தின் ஆலோசனையா? ஶ்ரீவைகுன்டம் லஞ்சப்பேய் இன்ஸ்பெக்டர் வெங்கடேசனின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்து போராட தயாராவோம் ... தன்னார்வலர்களே தயாராவோம் ...
பொய் வழக்கு போட்டால் சட்ட ரீதியாக சந்திப்போம் .... ஶ்ரீவைகுன்டம் D S P ,
S I க்கள் நியாயமாய் இ௫க்க இன்பெக்டர் மட்டும் அதிகார துஷ்பிரயோகம் செய்வது ஏன் ? 


நாடளும் மக்கள் கட்சி.....

National leader 19.11.2015 dhinamani news paper


Wednesday, November 18, 2015

Bala to make a controversial film?

Director Bala, who is currently giving finishing touches to Thaarai Thappattai,  is likely to helm a multi-starrer film based on the controversial Kuttra Parambarai novel.
Set in pre-independence era, the film has scope for many characters and hence Bala is said to be in talks with Vishal, Arya, Rana, Arvind Swamy and Atharvaa.
The novel deals about sensitive issues, it may be noted. Earlier Kamal Haasan and Bharathiraja had dreamt of making films based on 'Kuttra Paramabarai'.
Talking about it once, Bharathiraja said, 'it is my desire and dream to Kutra Parambarai. It is set during the British era in India. A tale of father and son set in early 19th century. It needs a heavy budget.'

Saturday, November 14, 2015

Lakshmi Menon to pair up with Vijay Sethupathi

Lakshmi Menon had accepted Ajith's sister's role as she just wanted to be a part of an Ajith starrer without minding about the role she is offered. And now the talented actress's decision has been proven right.
Now the actress has also broke the long-held conception in Tamil cinema that actress's who act in sister roles would not be preferred for heroine roles after that. Reliable sources reveal that Lakshmi Menon has been approached to play the lead lady opposite Vijay Sethupathi in the film 'Dharmadurai' to be directed by Seenu Ramasamy and produced by RK.Suresh.
The 'Pandiyanadu' actress is yet to sign on the dotted lines but if she accepts the offer it will be her first film with the versatile and highly talented actor Vijay Sethupathi. Two powerhouse talents pairing up under a National award winning director will definitely result in a powerful and award-winning film.

813 வி.ஏ.ஓ. பணியிடங்களுக்கு பிப்ரவரி 14-ல் போட்டித் தேர்வு: தமிழ்வழி படித்தவர்களுக்கு 20 சதவீத இடங்கள் ஒதுக்கீடு

கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 813 காலியிடங்களை நிரப்புவதற்காக பிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் ஊழியர்களும், அலுவலர் களும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வு மூலமாக தேர்வுசெய் யப்படுகிறார்கள். நேர்முகத் தேர்வு இல்லாத பணிகளில் 1,934 காலியிடங்களுக்காக குரூப்-2ஏ தேர்வுக்கு ஆன் லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், 813 விஏஓ காலியிடங்களை நிரப்பு வதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, விஏஓ பணிக்கு எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் ஆன் லைனில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்கலாம். வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் நீங்கலாக இதர இட ஒதுக் கீட்டுப் பிரிவினருக்கும், ஆதரவற்ற விதவைகளுக்கும் வயது வரம்பு 40 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு
தமிழ்வழியில் படித்தவர் களுக்கு அரசுப் பணியில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப் படுகிறது. இந்த உத்தரவு விஏஓ பணிக்கும் பொருந் தும் என்பதால் மொத்த காலி யிடங்களில் 20 சதவீத இடங்கள் தமிழ்வழியில் எஸ்எஸ்எல்சி முடித்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே இதுகுறித்து குறிப்பிட வேண்டும்.
எழுத்துத் தேர்வு அடிப்படை யில் பணிநியமனம் நடை பெறும். நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் பொது அறிவு, திறனறிவு, கிராம நிர்வாக நடைமுறைகள், பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் ஆகிய பகுதிகளில் இருந்து 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப் பெண் 300. எழுத்துத் தேர்வுக் கான பாடத்திட்ட விவரங் கள் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் வெளியிடப்பட் டுள்ளன. எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றாலே பணி உறுதி. தகுதியுள்ள விண் ணப்பதாரர்கள் டிசம்பர் 14-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித் துள்ளது.
விஏஓ பணியில் சேரு வோருக்கு சம்பளம் ஏறத்தாழ ரூ.17 ஆயிரம் அளவுக்கு கிடைக்கும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப்படும் பட்சத்தில் சம்பளம் கணிசமாக உயரும் வாய்ப்புள்ளது. 6 ஆண்டு பணியை முடித்தவர்கள் துறைத்தேர்வுகளில் தேர்ச்சிபெற்றால் வருவாய்த் துறையில் உதவியாளர் ஆகலாம். அதன்பின்பு அவர்கள் வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் என படிப்படியாக பதவி உயர்வு பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷேர் செய்தால் யாரோ ஒருவராது பயனடையலாம்....


Friday, November 13, 2015

தமிழ் தேசிய மக்கள் முன்னணி -TNPF

தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்காக, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தவர்களை நினைவில் ஏந்தி வணக்கம் செலுத்தப்படும் மாவீரர் நாளன நவம்பர்-27 அன்று, விஜய் தொலைக்காட்சி ச...ிங்கப்பூரில் தீபாவளிக்கொண்டாட்டம் என்ற பெயரில் கலைநிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளது !

 # மலேசிய மற்றும் சிங்கப்பூர் வாழ் தமிழ் உறவுகளே, தயவு செய்து இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து நம் மாவீரச் செல்வங்களுக்கு வணக்கம் செய்ய உதவுமாறு வேண்டிக்கொள்கின்றோம். !

திட்டமிட்ட வகையில் இந்த நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தமிழர்களின் தேசிய நாளன மாவீரர் நானை குழப்புவதர்காகவே இந்த நிகழ்வு நடாத்தப்படுகின்றன. தமிழர்களே நாங்கள் விழித்துக்கொள்ளவேண்டும் அல்லாது போனல் எங்கள் அடையாளங்களை இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுவார்கள் !!!!! …..

இந்த தகவலை அனைவரும் பகீரவும்.. நன்றி

Thursday, November 12, 2015

Damage to party flag pole triggers tension

Damage caused to a flag pole of Moovendar Munnetra Kazhagam party at Burma Colony in Navalpattu on the city’s outskirts triggered tension on Wednesday prompting deployment of police personnel.
Police sources said the flag pole was found damaged and the flag was found torn in the morning hours enraging the party functionaries.
The party members lodged a complaint with the Navalpattu police demanding action against the culprits.
Even while they were returning, a group of them is said to have entered into a locality of a community and damaged a car and a two-wheeler.
They allegedly assaulted a woman and another villager of the community triggering tension.
As news spread, the community members assembled in the area prompting the intervention of the police personnel to maintain order.
Superintendent of Police S. Rajeswari inspected the area where security had been provided as a security measure, the sources said.

VIVEK LIMPS BACK

Actor Vivek had lost his 13 year old son Prasanna Kumar some time back and since then, understandably has been taking a break from his work.

As time is the best healer and one will have to carry on for the loved  ones around, the actor has decided to resume work. Sometimes, immersing in work may provide a temporary respite.

As a first step, he took to his microblogger to announce that he will be re-starting his work schedule. He tweeted, “I m limping bk to normal life. From tommw I m going for shooting! Have a great day friends!! I shall b tweeting regularly hereafter”.

We wish you the best Vivek!

Friday, November 6, 2015

Gautham Karthik Misses Rangoon!



Gautham Karthik Misses Rangoon!
Gautham Karthik, the son of the veteran actor Karthik, feels that he will be missing his “Rangoon” team. Yes, the shooting of the movie is nearing its completion, and the post-production works are about to start. Gautham Karthik Tweeted about the final schedule of “Rangoon.” Rajkumar Periyasamy directs the movie. The female lead in the film is a model named Sana Makbul.

Thursday, November 5, 2015

Congress workers burn effigy of senior leader for 'badmouthing' Thevar

A section of Congress workers on Wednesday staged a protest in the city and burnt an effigy of the party's media cell chief Gopanna, alleging that he maligned freedom fighter Pasumpon Muthuramalinga Thevar. Led by Nachikulam L Sarvanan, the T Nagar area president of the Congress, party members including women staged the agitation and raised slogans against Gopanna. They later attacked his effigy and burnt it.

According to Saravanan, ahead of the recent birth centenary celebrations of Thevar, Gopanna spoke bad about him stating that he was against Dalits and instigated Thevars against Dalits. "Gopanna should not forget that Thevar donated more than 30 villages for Dalits," he said.

He added that Gopanna also badmouthed veteran actor Sivaji Ganesan who too was a Congress leader. "These acts of Gopanna, who considers himself an
intellectual, are unacceptable," Saravanan said.

Saravanan and his supporters urged All India Congress Committee president Sonia Gandhi to immediately step in and take stringent action against Gopanna for his irresponsible acts.

He also wondered why Tamil Nadu Congress Committee president EVKS Elangovan did not recommend any action against Gopanna yet. "Thevars in Congress are deeply hurt by Gopanna's words," he said, seeking an unconditional apology from Gopanna
.

Wednesday, November 4, 2015

தேவர் சிலை தங்கக் கவசம்: வங்கிப் பெட்டகத்தில் ஒப்படைப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கான தங்கக் கவசம், மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தில் திங்கள்கிழமை வைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு தங்கக் கவசத்தை அதிமுக சார்பில் முதல்வர்   ஜெயலலிதா வழங்கினார். இந்த தங்கக் கவசம், மதுரை அண்ணா நகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையின் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தேவர் ஜயந்தி விழாவுக்காக, தங்கக் கவசம் எடுத்துச் செல்லப்பட்டது. ஜயந்தி விழா நிறைவடைந்ததை அடுத்து, தங்கக் கவசம் மீண்டும் வங்கிக்கு திங்கள்கிழமை எடுத்து வரப்பட்டது.

 அதிமுக பொருளாளரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் கையெழுத்திட்டு, வங்கிப் பெட்டகத்தில் தங்கக் கவசத்தை வைத்தனர். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா,ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tuesday, November 3, 2015

S.J.Suryah’s Little Secret Revealed

SJ Suryah is going to be seen as Villian wth new get up in Vijay Sethupathi, Bobby Simha starring Iriaivi movie directed by Karthik Subbaraj.
SJ Suryah
S.J.Suryah was last seen as a lead actor in the movie ‘Isai’. Later the actor kept a low profile and never signed any movies it was however said that he might be directing ‘Vijay 60’ and he is busy in shaping up the final phase of the bound script. He also completed ‘Iriaivi’ under Karthik Subbaraj direction.
Apart from SJ Suryah the movie features Vijay Sethupathi, Bobby Simha, Anjali and Karunakaran in crucial roles. Santosh Narayanan is the Music composer. Vivek Harshan handles the cuts. Sivakumar Vijayan is the cinematographer and he replaced spot of Gaveric Amy.
Karthik Subbaraj after the mind-boggling success of ‘Jigarthanda’ directs this venture. This project is produced by CV Kumar on behalf of Thirukumaran entertainment. The entire movie was completed in a short span of 59 days.
Bankable sources now revealed that the movie will have a new villain. The villain is none other than S.J.Suryah. The source added that SJ Suryah’s character will be a new one to Tamil cinema. His get up will also be in a new dimension. Kamalini Mukherjee will be pairing with S.J.Suryah.

ட்விட்டரில் என் பெயரில் மோசடி நடக்கிறது: கொம்பன் இயக்குநர் அறிக்கை

ட்விட்டரில் என் பெயரில் மோசடி நடக்கிறது என்று கொம்பன் இயக்குநர் முத்தையா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த அறிக்கையில் அவர் கூறியதாவது:

ஃபேஸ்புக், ட்விட்டரை நான் பயன்படுத்தியதில்லை. என் பெயரில் கணக்குகள் தொடங்கி தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். என் பெயரில் தொடர்புகொண்டு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி மோசடி செய்வது போன்ற தகவல்கள் என்னிடம் வருகின்றன. என்னை நேரில் சந்திக்காமல் எவ்வித பொய்யான தகவல்களையும் நம்பவேண்டாம். அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல என்று அறிக்கை விடுத்துள்ளார்.

Monday, November 2, 2015

மக்களுக்காக உண்மையாக உழைக்கும் பொய் வாக்குறுதிகளை தராத கட்சியுடன் தான் கூட்டணி சேருவேன் நடிகர் கார்த்திக் பேட்டி

மக்களுக்காக உண்மையாக உழைக்கும், பொய் வாக்குறுதிகளை தராத கட்சியுடன் தான் கூட்டணி சேருவேன் என்று நடிகர் கார்த்திக் கூறினார்.

ஆசை இல்லை

நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனர் நடிகர் கார்த்திக் நேற்று மதுரை வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் சிவகாசிக்கு செல்ல 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. நான் என்ன அங்கு சென்று ஜாதி கலவரமா ஏற்படுத்த போகிறேன். சிவகாசியில் சீன பட்டாசு விற்பனைக்கும், அதனை இறக்குமதி செய்வதற்கும் தடை விதிக்க வேண்டும் என்றும், அதற்கான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள தான் வந்தேன். ஆனால் நான் அங்கு வந்தால் ஜாதி கலவரம் வரும் என்று நினைத்து, எனக்கு 144 தடை உத்தரவை விதித்துள்ளனர். எனவே சிவகாசிக்கு நான் போகமாட்டேன். சீனாவை கண்டால் இந்தியா பயப்படுகிறது. ஏன் என்றால் இந்தியாவை சுற்றிலும் சீனா ராணுவ தளத்தை வைத்துள்ளது. அதனால் தான் சீனாவிடம் இந்தியா பணிந்து போகும் நிலையில் உள்ளது.

என்னை ஒரு ஜாதி கட்சி தலைவராக நினைத்து வருகிறார்கள். நான் அப்படிபட்டவன் அல்ல. பார்வர்டு பிளாக் கட்சியில் நான் இருந்த போது அனைத்து ஜாதியினரையும் கட்சியில் சேர்க்கலாம் என்று கூறினேன். அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தனிக்கட்சி தொடங்கினேன். நான் ஜாதி அரசியலை நடத்தவில்லை. மேலும் எனக்கு முதல்வராகும் ஆசை எல்லாம் இல்லை.

மணல் திருட்டு

தமிழகத்தில் இல்லாத பிரச்சினைகளே இல்லை. விலைவாசி உயர்வு, மதுக்கடை என்று பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. டாஸ்மாக் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடமுடியாது. டாஸ்மாக் கடைகளை மூடினால் கள்ளச்சாரம் வந்து விடும். எனவே கள்ளச்சாராயத்தை தடுக்க முடிந்தால், டாஸ்மாக் கடைகளை மூடுங்கள்.

தாமிரபரணி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க முடியவில்லை. அதற்கான ஆதாரத்தை வைத்து தான் இங்கு பேசுகிறேன். நடிகர் சங்க தேர்தலில் நடிகை சச்சு, மன்சூர்அலிகான் போன்றவர்களுக்கு ஓட்டு போடும் உரிமை இல்லை என்று கூறியதை கேட்டு எனது மனம் மிகவும் துடித்தது. நடிகர் சங்கம் கடனில் இருக்கும் போது தான் நடிகர் விஜயகாந்த் தலைவர் ஆனார். அவர் அந்த சங்க கடனை அடைத்து, சுமார் ஒரு கோடி ரூபாயை வைப்பு நிதியாக வைத்து விட்டு சென்றார். அதன்பின்னர் சரத்குமார் வந்தார். எனக்கு நடிகர்கள் சங்கத்தில் எல்லோரும் நண்பர்கள் தான். ஆனால் சங்க இடத்தில் வேறு நபர்கள் பயன்படுத்த கூடாது என்பது எனது கருத்தாகும்.

கூட்டணி

நடிகை குஷ்பு எனக்கு சிறந்த நண்பர். ஆனால் நாங்கள் கட்சி தொடர்பாக இல்லாமல், எப்போதும் நண்பர்களாக மட்டுமே இருப்போம். தமிழகத்தில் யாரும் தனித்து ஆட்சி செய்ய முடியாது. கூட்டணி அமைத்து தான் ஆட்சி செய்ய முடியும். நான் கூட்டணி சேருவது என்றால் மக்களுக்கு உண்மையாக உழைக்கும், பொய் வாக்குறுதிகளை தராத கட்சிகளுடன் மட்டும் தான் கூட்டணி சேருவேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 

எனக்காக வருந்திய அனைத்து இதயங்களுக்கும் நன்றி: நடிகர் விவேக் உருக்கமான அறிக்கை

என் மகனின் இழப்பில், எனக்காக வருந்திய அனைத்து இதயங்களுக்கும் நன்றி என்று நடிகர் விவேக் ட்விட்டர் பக்கம் வழியாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னகுமார் (14), சென்னையில் வியாழக்கிழமை காலமானார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பிரசன்னகுமாரின் உடலுக்கு திரையுலகத்தினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் விருகம்பாக்கம் இளங்கோ நகரில் உள்ள மயானத்தில் நேற்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது. நடிகர் விவேக் இறுதிச் சடங்குகளைச் செய்தார்.
இந்நிலையில் நடிகர் விவேக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து கூறியதாவது: 
மீடியா வெளிச்சம் வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, கண்ணியம் காத்த அனைத்து ஊடகங்களுக்கும் என் நன்றிகள். என் மகனின் இழப்பில், எனக்காக வருந்திய அனைத்து இதயங்களுக்கும் நன்றி என்று அவர் கூறியுள்ளார்.

மதுரையில் விதி மீறி பேரணி: அ.இ.பா.பி. எம்.எல்.ஏ. உள்பட 600 பேர் மீது வழக்கு

மதுரையில் தேவர் ஜயந்தியை முன்னிட்டு விதியை மீறி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தியதாக அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த சட்டப் பேரவை உறுப்பினர் பி.வி. கதிரவன் உள்ளிட்ட 600 பேர் மீது போலீஸார் சனிக்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.
 மதுரையில் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 கோரிப்பாளையம் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு கட்சியினரும், சமுதாய அமைப்பினரும் மாலை அணிவித்தனர்.   பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் 4 பிரிவாக பொதுக்கூட்டம் நடத்தினர். அதற்கு காவல்துறை முன் அனுமதியும் பெற்றிருந்தனர். ஆனால் பேரணியாகச் செல்லவோ, கூடுதல் நேரம் பொதுக்கூட்டம் நடத்தவோ கூடாது என காவல்துறை நிபந்தனை விதித்திருந்தது.  அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொதுக்கூட்டம் ஜான்சிராணி பூங்காவில் நடைபெற்றது.
பின்னர் மாலையில் பாலம் ஸ்டேசன் சாலையிலிருந்து நூற்றுக்கணக்கானோர் கோரிப்பாளையத்துக்கு வந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர் அவர்கள் ஜான்சிராணி பூங்கா நோக்கி பேரணியாகப் புறப்பட்டனர். அவர்கள் வந்த வழியெங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  ஜான்சிராணி பூங்காவில் கூடுதல் நேரம் பொதுக்கூட்டம் நடந்ததாகவும், இதனால் பொதுமக்கள் நெரிசலில் சிக்கியதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாகவும், விதி மீறி பொதுக்கூட்டத்தை நடத்தியதாகவும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த உசிலம்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் பி.வி. கதிரவன் உள்ளிட்ட 600 பேர் மீது தெற்குவாசல் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். இதில் 10 பெண்களும் அடங்குவர்.  தெற்குவாசல் காவல் உதவி ஆய்வாளர் மருதலட்சுமி அளித்த புகாரின் பேரில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

சீமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மதுரையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 10 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
 மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே ஒரு அமைப்பைச் சேர்ந்த மதுரை வீரன் போயன் உள்ளிட்ட 10 பேர் திடீரென கூடி நின்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். உடனே போலீஸார், அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
 இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, சீமான் குறிப்பிட்ட சமூகத்தினரை அவதூறாகப் பேசியதாகக் கூறி பழந்தமிழர் இயக்கத்தினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கைது செய்து விடுவித்தோம் என்றனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும்: கமல் ஹாசன் கோரிக்கை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் ஜல்லிகட்டு தொடர்பான புகைப்படக் கண்காட்சியை கமல் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்பது என் விருப்பம். ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரவிளையாட்டு. ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை.  ஜல்லிக்கட்டு இந்தியாவில் நடைபெற்றால் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதனால் சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும் என்று அவர் தெரிவித்தார். 
 
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
 
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா பிரதான சாலை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கோகுலம் மக்கள் கட்சி நிர்வாகி சேகர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தேவர் தேசியப் பேரவை தலைவர் கே.சி.திருமாறன் சிறப்புரையாற்றினார்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் விதித்த தடையை நீக்குவதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.