Monday, November 2, 2015

எனக்காக வருந்திய அனைத்து இதயங்களுக்கும் நன்றி: நடிகர் விவேக் உருக்கமான அறிக்கை

என் மகனின் இழப்பில், எனக்காக வருந்திய அனைத்து இதயங்களுக்கும் நன்றி என்று நடிகர் விவேக் ட்விட்டர் பக்கம் வழியாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னகுமார் (14), சென்னையில் வியாழக்கிழமை காலமானார். சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பிரசன்னகுமாரின் உடலுக்கு திரையுலகத்தினர், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர், அவரது உடல் விருகம்பாக்கம் இளங்கோ நகரில் உள்ள மயானத்தில் நேற்று பிற்பகல் தகனம் செய்யப்பட்டது. நடிகர் விவேக் இறுதிச் சடங்குகளைச் செய்தார்.
இந்நிலையில் நடிகர் விவேக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்து கூறியதாவது: 
மீடியா வெளிச்சம் வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி, கண்ணியம் காத்த அனைத்து ஊடகங்களுக்கும் என் நன்றிகள். என் மகனின் இழப்பில், எனக்காக வருந்திய அனைத்து இதயங்களுக்கும் நன்றி என்று அவர் கூறியுள்ளார்.

No comments: