Monday, November 30, 2015

நடிகர் கார்த்திக் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு முழங்காலில் ஆபரேஷன் நடந்தது.

முழங்கால் வலி
நடிகர் கார்த்திக் ஒரு மாதமாக முழங்கால் வலியால் அவதிப்பட்டார். இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். டாக்டர்கள் ஆபரேஷன் செய்துகொள்ளும்படி அறிவுறுத்தினர். இதைத் தொடர்ந்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
...
டாக்டர்கள் அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்தனர். ஆபரேஷனுக்குப் பிறகு கார்த்திக் நலமுடன் இருப்பதாக அவரது மகனும் நடிகருமான கவுதம் கார்த்திக் தெரிவித்தார். விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறினார்.
முன்னணி கதாநாயகன்
கார்த்திக் 1980 மற்றும் 90-களில் தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருந்தார். இவர் அறிமுகமான படம் ‘அலைகள் ஓய்வதில்லை.’ தொடர்ந்து 130-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ‘நினைவெல்லாம் நித்யா, மவுன ராகங்கள், அக்னி நட்சத்திரம், வருஷம் 16, கிழக்கு வாசல், அமரன், பொன்னுமணி, உள்ளத்தை அள்ளித்தா,’ உள்ளிட்டவை கார்த்திக்கின் முக்கிய படங்கள்.
சமீபத்தில் வெளியான தனுசின் ‘அனேகன்’ படத்தில் வில்லனாக வந்தார். தற்போது அமரன் படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார்.
2006-ல் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்து அரசியலில் குதித்தார். பின்னர் அக்கட்சியில் இருந்து விலகி 2009ல் நாடாளும் மக்கள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி அதன் தலைவராக இருந்து வருகிறார்.
See More

No comments: