Monday, November 2, 2015

சீமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மதுரையில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய 10 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
 மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே ஒரு அமைப்பைச் சேர்ந்த மதுரை வீரன் போயன் உள்ளிட்ட 10 பேர் திடீரென கூடி நின்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவரது உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். உடனே போலீஸார், அவர்களை கைது செய்து வேனில் ஏற்றிச் சென்றனர்.
 இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும் போது, சீமான் குறிப்பிட்ட சமூகத்தினரை அவதூறாகப் பேசியதாகக் கூறி பழந்தமிழர் இயக்கத்தினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் கைது செய்து விடுவித்தோம் என்றனர்.

No comments: