Wednesday, November 4, 2015

தேவர் சிலை தங்கக் கவசம்: வங்கிப் பெட்டகத்தில் ஒப்படைப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கான தங்கக் கவசம், மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தில் திங்கள்கிழமை வைக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது சிலைக்கு தங்கக் கவசத்தை அதிமுக சார்பில் முதல்வர்   ஜெயலலிதா வழங்கினார். இந்த தங்கக் கவசம், மதுரை அண்ணா நகரில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையின் பெட்டகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

தேவர் ஜயந்தி விழாவுக்காக, தங்கக் கவசம் எடுத்துச் செல்லப்பட்டது. ஜயந்தி விழா நிறைவடைந்ததை அடுத்து, தங்கக் கவசம் மீண்டும் வங்கிக்கு திங்கள்கிழமை எடுத்து வரப்பட்டது.

 அதிமுக பொருளாளரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் கையெழுத்திட்டு, வங்கிப் பெட்டகத்தில் தங்கக் கவசத்தை வைத்தனர். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி எஸ்.டி.கே.ஜக்கையன், மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா,ஆட்சியர் எல்.சுப்பிரமணியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments: