தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்று நடிகர் கமல் ஹாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் ஜல்லிகட்டு தொடர்பான புகைப்படக் கண்காட்சியை கமல் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர வேண்டும் என்பது என் விருப்பம். ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீரவிளையாட்டு. ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை. ஜல்லிக்கட்டு இந்தியாவில் நடைபெற்றால் வெளிநாட்டுப் பயணிகளின் வருகை அதிகரிக்கும். இதனால் சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும் என்று அவர் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா பிரதான சாலை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கோகுலம் மக்கள் கட்சி நிர்வாகி சேகர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தேவர் தேசியப் பேரவை தலைவர் கே.சி.திருமாறன் சிறப்புரையாற்றினார்.
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு நீதிமன்றம் விதித்த தடையை நீக்குவதற்கான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ளவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களை எழுப்பினர்.
No comments:
Post a Comment