Tuesday, April 26, 2016

கண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய !

*சில பெண்களுக்கு கண்களைச் சுற்றி கருப்பு வளையம் இருக்கும். இந்த பிரச்சினை தான் பெண்களை வயதானவர் போல் காட்டும். இதை எளிதாக நீக்கி விடலாம். வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு இரண்டையும் சம அளவு எடுத்து அதை நன்றாக அரைத்து கொள்ளவும்.
*ஒரு மெல்லிய வெள்ளை துணியை பன்னீரில் நனைத்து கண்களின் மீது வைத்து, அதன் மேல் அரைத்த கலவையை வைத்து படுக்க வேண்டும். இப்படி முப்பது நிமிடம் இருக்க வேண்டும். இவ்வாறு 5 நாட்கள் செய்தாலே போதுமானது.
...
*கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். சரியான தூக்கம் இல்லாமல் போனாலும் கண்களில் கரு வளையம் தோன்றும்.தினமும் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும்.
*அல்லது, வெள்ளரிக்காய்ச்சாறை முகத்தில் தேய்த்து, ஒரு மணி நேரத்திற்கு பின் கழுவிவிட வேண்டும். தொடர்ந்து இதுபோல் செய்து வந்தால், கண் அழகை பாழாக்கும் கரு வளையம் படிப்படியாக மறைய ஆரம்பித்து விடும்.
*உணவில் அதிகளவு காய்கறிகளை சேர்த்து கொள்ளவேண்டும்.தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பாமர தேவனுக்கு ஓர் கடிதம்

ஓலை குடிசை வீட்டில் பிறந்து தன்னைச்சார்ந்த சமுகம் அடிமைப்படுத்தபடுவதை கண்டு களத்தில் அதற்கு ஓர் தீர்வுக்கண்டு கிட்டத்தட...்ட பத்துவருடத்திற்கு மேல் சிறைத்தண்டனை அணுபவித்துவிட்டு வெளியே வந்தவரை எதிரிகளிடமிருந்து இந்நிமிடம் வரை பேணிகாத்துக்கொண்டிருப்பது அவரைச்சுற்றியுள்ள உணர்வாளனும் - அந்த புலிகொடியும் தான்.
இன்று ஒரு படி மேலே போய் அவருக்கு சட்டசபை தேர்தலில் நிற்க தேசிய கட்சியில் ஓர் வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
அந்த ஏழை தேவனுக்கு
தெய்வம் தேவரையா அளித்த பரிசாகவே இதை நான் கருதுகிறேன்.
அவனின் தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்து உதவ அயல் நாட்டில் குப்பை அள்ளுபவர்கள் முதல் கூலிங்கிலாஸ் போட்டு ஒய்யாரத்தில் இருப்பவர்களை வரை உதவ தயாராக உள்ளனர் - காரணம் ஓர் உண்மை பாமர தொண்டனை இச்சமுகம் எந்தசூழ்நிலையிலும் இழந்துவிடக்கூடாது என்பதற்காகவே.,
இந்த சூழ்நிலையில் அன்று கட்டத்துறையை கவிழ்த்த
அதே கூட்டம் அவரைச்சார்ந்த இவரையும் பழிவாங்க இன்று இரு கண்களை விழித்தவாறு காத்துக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட பல கோடி ரூபாய் அச்சமுதாயத்தினர்களிடமிருந்து இவர்களுக்கு கைமாறியுள்ளதாக ஓர் தகவல் செவியை எட்டுகிறது. காசுக்காக சொந்த இனத்தவனையே அழிக்க நினைக்கும் அந்த ஈன பிறவிகளை என்ன சொல்ல..? சுயட்சையாக நின்று சுரேஸ் தேவரை செல்லாக்காசக ஆக்கவேண்டும் என்று எண்ணுகின்றனர்.
அன்று கட்டத்துரை விடுதலையாகி வெளிவரும் போது இன்று சுரேஸ் தேவரை பேணிகாப்பது போல் நம் சகோதரர்கள் அவரை காக்கவில்லை அதனாலயே அவரை எளிதாக படுகொலை செய்தனர். அதன்பின் சுதாரித்துக்கொண்ட தேவரினத்து சகோதரர்கள் இன்று சுரேஸ் தேவரை எவராலும் எளிதாக நெருங்க இயலாத அளவுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றனர் ஆதலால் எதிரிகளால் கட்டத்துரையை அழித்தது போல இவரை அழிக்க முடியவில்லை. அதனால் இத்தேர்தலிலாவது இவரை அசிங்கத்துக்கு உள்ளாக்கவேண்டும் என்று எண்ணி அந்த எதிரிகளால் களம் இறக்கிவிடப்பட்டிருக்கும் நபர் தான் அந்த நபராம்.
இறுதியாக ஒன்றே ஒன்றை கூறிக்கொள்கிறேன் அன்று கட்டத்துரைக்கு நேர்ந்தது
இன்று சுரேஸ் தேவருக்கு நேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்...!
முடிவு உங்கள் கையில்.,


Ipadiku Anbu

Monday, April 25, 2016

கேப்டன் புரட்சி கலைஞர் விஜயகாந் அவர்களின் எழுச்சி உரை.


கோவில்பட்டி அருகே தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க இளைஞர்கள் எதிர்ப்பு

கோவில்பட்டி அருகே தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க இளைஞர்கள் எதிர்ப்பு
கோவில்பட்டி அருகேயுள்ள வடக்குதிட்டங்குளத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அங்குள்ள தேவர்சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற போது அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி – த.மா.க. கூட்டணி சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு இன்று மாலை கோவில்பட்டி அருகேயுள்ள வடக்குத்திட்டங்குளத்தில் வைகோ தனது பிரச்சாரத்தினை தொடங்கினார். அப்போது அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றார். அப்போது அங்கியிருந்த இளைஞர்கள் சிலர் வைகோ மாலை அணிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.


 
இது தேர்தல் சமயமாக இருக்கிறது. இல்லை என்றால் 100பேர் வேல், கம்பு , அருவாளுடன் வந்தாலும் எதிர்த்து நிற்கும் சக்தி எனக்கு உண்டு, தூப்பாக்கிகள் கண்டு அஞ்சாதவன் நான் இதற்கு பயப்பட மாட்டேன், திமிரு விரைவில் அடக்கப்படும் என்றார். இதனை தொடர்ந்து இளைஞர்களின் எதிர்பினை மிறி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விட்டு, தெற்கு திட்டங்குளத்தில் உள்ள இம்மானுவேல் சேகரனார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தன பிரச்சாரத்தினை தொடர்ந்தார். 

வைக்கோவை வண்மையாக கன்டிக்கிறோம்...!

நேற்று சிவகாசி தேவர் சிலைக்குல் செருப்பு கலட்டாமல் சென்றது மட்டும் அல்லாமல் வேட்டியை தூக்கி கட்டி வீர அவசனம் பேசிய வைக்கோ
மண்ணிப்பு கேட்க வேண்டும்....!

தேவரின சிறப்பு செய்திகள்

Friday, April 22, 2016

செய்தி



அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைமையில் முக்குலத்தோர் அமைப்புகள் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளன. இக் கூட்டணி 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருக்கிறது.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் பி.வி.கதிரவன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் என்.சேதுராமன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தேசிய மறுமலர்ச்சி இயக்கம், நேதாஜி சுபாஷ் சேனை, தீ கட்சி, மறத்தமிழர் சேனை உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகள், நாங்கள் வளர்ந்துவிடக் கூடாது என்று ஒவ்வொரு தேர்தலிலும் செயல்பட்டு வருகின்றன.  இந்த தேர்தலிலும் கடைசி வரை ஒரு தொகுதி, இரண்டு தொகுதி தருகிறோம் எனக் கூறி ஏமாற்றிவிட்டனர்.
 தமிழக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தை
பிளவுபடுத்தி வளரவிடாமல் செய்கின்றனர். முக்குலத்தோர் சமூகத்தின் ஒற்றுமையைக் காக்கும் வகையிலும், முக்குலத்தோரின் வாக்கு வங்கியை அடையாளப்படுத்தவும் சிங்கம் கூட்டணியை அமைத்துள்ளோம். சிங்கம் சின்னத்திலேயே போட்டியிட உள்ளோம்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை அனைத்துக் கட்சிகளும் அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றன.
பார்வர்டு பிளாக் கட்சி உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூர், முதுகுளத்தூர் உள்ளிட்ட 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தென்காசி, கடையநல்லூர், விளாத்திகுளம், சிவகாசி, தஞ்சாவூர், நன்னிலம், ஒரத்தநாடு உள்ளிட்ட 24 தொகுதிகளில் மூவேந்தர் முன்னணி கழகம் போட்டியிடுகிறது. மூவேந்தர் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றனர். 
விடியல் கூட்டணியைவிட, சிங்கம் கூட்டணி சிறந்தது என்பதால் இப்போது இந்த அணியில் சேர்ந்துள்ளேன் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் சேதுராமன் தெரிவித்தார்.
 
 
மதுரை மேலூர் :-
அதிமுக மதுரை,மேலூர் வேட்பாளர் வலையர் இனத்தவர் என்பதால் கள்ளர் இன மக்கள் அதிமுக மீது கடும் கோபத்தில் உள்ள இந்த நிலையில்
‪#‎பார்வட்_பிளாக்‬ இன்று சிங்கம் சின்னத்தில் ‪#‎கலைமணி_அம்பலம்‬ அவர்களை மதுரை,மேலூர் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது
ஆக #கலைமணி_அம்பலம் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம்....!

Thursday, April 21, 2016

தமிழகத்தில் பாஸ்வான் தேர்தல் பிரசாரம்: "விடியல்' கூட்டணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் தகவல்

நாடாளும் மக்கள் கட்சியின் தலைமையில் அமைந்துள்ள "விடியல்' கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மத்திய உணவு, பொது விநியோகத் துறை அமைச்சரும், லோக் ஜன சக்தி தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் விரைவில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இந்தத் தகவலை அந்தக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக் புதன்கிழமை தில்லியில் தெரிவித்தார்.
 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி, அதிமுக அணியில் இருந்து அண்மையில் வெளியேறிய டாக்டர் சேதுராமன் தலைமையிலான அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், சக்திவேல் தலைமையிலான மக்கள் மாநாட்டு கட்சி, வித்யாதரன் தலைமையிலான லோக் ஜன சக்தி ஆகியவை சேர்ந்து "விடியல் கூட்டணி' என்ற அணியை சில தினங்களுக்கு முன்பு உருவாக்கின. இந்த நிலையில், "விடியல்' கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வானை அவரது அலுவலகத்தில் புதன்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவர் சக்திவேல், லோக் ஜன சக்தி மாநிலத் தலைவர் வித்யாதரன், பொதுச் செயலாளர் ஓ.எஸ்.அப்துல்லா ஆகியோர் உடனிருந்தனர்.
 இந்தச் சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் கார்த்திக் கூறியதாவது: எங்கள் கூட்டணியின் மூத்த தலைவர் என்ற முறையில் ராம் விலாஸ் பாஸ்வானை சந்தித்து தமிழக தேர்தல் பற்றி ஆலோசனை நடத்தினோம். தமிழக அரசியல் சூழ்நிலை, தேர்தலுக்கான கூட்டணியின் செயல் திட்டம் குறித்து அவரிடம் விளக்கினோம். தேர்தல் உத்திகள் தொடர்பாக அவரும் சில யோசனைகளைத் தெரிவித்தார். கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகத்தில் விரைவில் பிரசாரம் செய்ய ராம் விலாஸ் பாஸ்வான் விருப்பம் தெரிவித்தார்.
 எங்கள் கூட்டணியில் சேருவதற்கு மேலும் சில கட்சிகள் விருப்பம் தெரிவித்துள்ளன. அவற்றுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். கூட்டணியில் உள்ள சில கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. தொகுதிப் பங்கீட்டில் எங்களுக்குள் சிக்கல் இல்லை. தேர்தலையொட்டி கூட்டணியின் செயல்திட்டம் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்றார் கார்த்திக்.
 பாஜக அணியில் பிளவா?: இந்த நிலையில், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன சக்தி, தமிழகத்தில் வேறு அணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்குக் காட்டும் ஆர்வம், பாஜக அணி மாநில அளவில் பிளவுபட்டுள்ளதாகக் கருதலாமா? என்று மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜனிடம் "தினமணி' நிருபர் கேட்டதற்கு, "மத்தியில் பாஜக அணியில்தான் லோக் ஜன சக்தி உள்ளது. விடியல் கூட்டணிக்கு ஆதரவாக ராம் விலாஸ் பாஸ்வான் பிரசாரம் செய்யும் தகவலே நீங்கள் கூறித்தான் எனக்குத் தெரிகிறது. முழு விவரத்தையும் அறிந்த பிறகே என்னால் கருத்துக் கூற முடியும்' என்றார்.

சிங்க கூட்டனி

உலகத்தலைவன் நேதாஜி அவர்களாலும்
தென்னகத்து சிங்கம் பசும்பொன் தேவர் அவர்களாலும்
ஆரம்பிக்கப்பட்ட ...
அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் இயக்கத்தின் தலைமையில்
தமிழக மக்களின் நலனுக்காகவும் நம் முன்னோர்களின் புகழினை அழியாமல் காக்கவும்
திரு. வாண்டையார் அவர்களின் தலைமையிலான மூவேந்தர் முன்னேற்ற கழகமும்

திரு.சேதுராமன் அவர்களின் தலைமையிலான மூவேந்தர் முன்னனி கழகமும்
திரு.புதுமலர் பிரபாகரன் அவரகளின் மறத்தமிழர் சேனையும்
மற்றும் நேதாஜி சுபாஷ் சேனை
தீ அமைப்பு
தேசிய மறுமலர்ச்சி இயக்கம்
போன்ற சமுதாய அமைப்பும் இன்னும் சில தேவர் இன அமைப்புகளும் ஒன்றினைந்து
சிங்க கூட்டனி
என்ற பெயரில் ஒரு கூட்டனியை உருவாக்கி தென் தமிழகம் முழுவதும்
தேவர் அவர்கள் நின்ற சின்னமான சிங்கம் சின்னத்திலயே
2016சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றனர்
நாம் அனைவரும் நமது சமுதாய நலனுக்காக தன் மானத்திற்காக
சிங்ககூட்டனி வேட்பாளர் அணைவருக்கும்
சிங்கம் சின்னத்தில் வாக்களித்து நமக்கான உரிமைகளை சட்டசபையில் எடுத்து பேச சிங்க கூட்டனி வேட்பாளர்களை சீறும் சிங்கங்களாக அனுப்புவோம் என சபதம் எடுங்கள்
ஜெய்ஹிந்த்.....

Wednesday, April 20, 2016

21.04.2016 அன்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பில்

அகில இந்திய பார்வர்ட் பிளாக், மூவேந்தர் முன்னேற்ற கழகம், மூவேந்தர் முன்னணி கழகம், மறத்தமிழர் சேனை, தேசிய மறுமலர்ச்சி இயக்கம், நேதாஜி சுபாஷ் சேனை, தீ அமைப்பு, சென்னைவாழ் முக்குலத்தோர் பாசறை, முக்குலத்தோர் முன்னேற்ற இளைஞர் அணி ஆகிய இயக்கங்கள் ஒன்றிணைந்து 'தேர்தலை எதிர்கொள்கிறது.
வலுவாக போட்டியிடத்தக்க நாற்பது தொகுதிகள் கண்டறியப்பட்டு ஒதுக்கீடு நிறைவடைந்து விட்டது.
...
திறமையான பேச்சாளர்கள் / சில தலைவர்கள் போட்டியிடாமல் மக்களை சந்தித்து வாக்கு திரட்ட முடிவாகியுள்ளது.
21.04.2016 அன்று மாலை பத்திரிகையாளர் சந்திப்பில் அனைத்து தேவரின தலைவர்களும் ஒரே இடத்தில் சங்கமிக்கும் வாய்ப்புள்ளது.

புதுமலர்_பிரபாகரன்

Monday, April 18, 2016

உசிலம்பட்டியில் நடிகர் கார்த்திக் போட்டி மேலும் சில கட்சிகள் இணைகின்றன

சென்னை : கார்த்திக் தலைமையிலான விடியல் கூட்டணியில் நடிகர் கார்த்திக் உசிலம்பட்டி அல்லது கோவில்பட்டியில் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், அவர் இந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக பெரிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அவரால் பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைக்க முடியாமல் போனது.

இந்நிலையில், நாடாளும் மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான கார்த்திக் 6 சிறிய கட்சிகளை ஒருங்கிணைத்து விடியல் கூட்டணி என்ற புதிய அணியை நேற்று முன்தினம் அதிரடியாக உருவாக்கினார். அந்த புதிய அணியில் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, டாக்டர் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், வித்யாதரன் தலைமையிலான லோக் ஜன் சக்தி பார்ட்டி, சத்யசீலன் தலைமையிலான தலித்சேனா, சக்திவேல் தலைமையிலான மக்கள் மாநாட்டு கட்சி, கோபி நாராயண் யாதவ் தலைமையிலான தமிழக மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.


மேலும், வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழக முன்னேற்ற கழகம், புதிய பாரதம் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்து கார்த்திக் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இந்த கட்சிகளும் விடியல் கூட்டணியில் சேரும் என்று கூறப்படுகிறது. தமிழகம், புதுச்சேரியில் அனைத்து தொகுதியிலும் விடியல் கூட்டணி மூலம் வேட்பாளர்களை களம் இறக்க கார்த்திக் முடிவு செய்துள்ளார். விரைவில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். நடிகர் கார்த்திக், உசிலம்பட்டி அல்லது கோவில்பட்டியில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

Saturday, April 16, 2016

Tamil Nadu election: Actor Karthik to launch alliance

hila India Naadalum Makkal Katchi (AINMK) leader and Tamil actor Karthik, who quit as the state president of the All India Forward Bloc a few years ago, will launch an electoral alliance - Vidiyal -- on Saturday.

As of now, the alliance comprises of six like-minded outfits, including N Sethuraman's All India Moovendar Munnani Kazhagam (AIMMK). More outfits are expected to join it.

Talking to TOI, Karthik said, "Talks are on, and the formation of the alliance is still fluid."


"This is not a single caste-based alliance. Members of our alliance will represent all castes including thevars, gounders, dalits and vanniyars," he said.


However, Karthik said he would not contest in the election. But he would campaign for the candidates of the alliance.

Friday, April 15, 2016

கார்த்திக் தலைமையில் புதிய கூட்டணி அமைப்பு

நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி, தி.மு.க. கூட்டணியில் சேர முயற்சி மேற்கொண்டது. ஆனால் அங்கு தொகுதிகள் கிடைக்காததால் 25 தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தது.
இதே போல் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவதற்காக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை பார்த்து பேசி இருந்தார். அங்கு ‘சீட்’ ஒதுக்கப்படாததால் கோபாலபுரம் சென்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அங்கும் ‘சீட்’ இல்லை என்று கூறி விட்டனர்.
இதனால் டாக்டர் சேதுராமன் தேவரின் அமைப்புகளை ஒன்று சேர்க்க ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில் பார்வர்டு பிளாக் கட்சி எம்.எல்.ஏ. கதிரவனும் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காததால் அந்த கூட்டணியில் இருந்து விலகினார்.
தற்போது நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் ‘விடியல் கூட்டணியை’ உருவாக்கி உள்ளார்.
இதில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய டாக்டர் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, வித்யாதரன் தலைமையிலான லோக் ஜன் சக்தி பார்ட்டி, சத்யசீலன் தலைமையிலான தலித்சேனா, சக்திவேல் தலைமையிலான மக்கள் மாநாட்டு கட்சி, கோபி நாராயண் யாதவ் தலைமையிலான தமிழக மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்துள்ளது.
இது பற்றி விடியல் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் நடிகர் கார்த்திக் கூறுகையில், “இந்த கூட்டணியில் இன்னும் சில தேவரின் அமைப்புகள் இணைய இருக்கின்றது. நாங்கள் பொதுவான தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்து விடுவோம் என்று சொல்லவில்லை. ஆனால் நாங்கள் யார் என்பதை மற்ற அரசியல் கட்சிகளுக்கு நிச்சயம் புரிய வைப்போம்” என்றார்.

Monday, April 4, 2016

தமிழ் இனத்தை காப்பாற்றவே தேர்தலில் போட்டி: சீமான்

தமிழகத்தில் தமிழினத்தைக் காப்பாற்றவே நாம் தமிழர் கட்சி சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது என, அந்தக் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்தார்.
 
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழ் இனத்தை காப்பாற்றவே நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடலூரில் நான் போட்டியிடுகிறேன்.
 
வருகிற 10-ஆம் தேதி இரண்டாம் கட்டப் பிரசாரத்தை தொடங்க உள்ளோம் என்றார்.

‘குற்றப் பரம்பரை’ மகத்தான இலக்கிய காவியமாக அமையும்: இயக்குநர் பாரதிராஜா

குற்றப் பரம்பரை படத்தை ஒரு மகத்தான இலக்கிய காவியமாக மக்களுக்கு அளிப்பேன் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.
2007-ல் ஒரு பேட்டியின்போது இயக்குநர் பாரதிராஜா இவ்வாறு கூறினார்:
‘என் வாழ்க்கைக்கு அர்த்தம் தரப்போற விஷயம் அது மட்டும்தான். நானும் இளையராஜாவும் மீண்டும் இணையப் போறோம். சேதுபதிக் கிழவன் மாதிரி நானே நடிக்கிறேன். போலீஸ்காரன் வேஷத்தில் சேரன் நடிக்கிறார். ரத்னகுமார் வசனம் எழுதுகிறார். ‘குற்றப் பரம்பரை’ படம் எடுக்காம என் திரையுலக வாழ்க்கை நிறைவு பெறாது. பிரிட்டிஷ் காலத்துக் கதை. மண்ணைப் பிழிஞ்சு, மனசைக் கரைச்சு செய்திருக்கேன்!’ என்றார். ஆனால் அவர் அப்படத்தைத் தொடங்க காலதாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் இதை தலைப்பில் இயக்குநர் பாலா படம் எடுக்க முன்வந்ததாக செய்திகள் வெளியானதால் பரபரப்பு எற்பட்டது. வேல ராமமூர்த்தி எழுதிய கதையை மையமாக வைத்து பாலா இப்படத்தை எடுப்பதாகவும் விஷால், ஆர்யா, அதர்வா, ராணா, அரவிந்த் சாமி ஆகியோர் பாலாவின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகவும் கூறப்பட்டது.
பாரதிராஜாவின் கனவுப் படம் என்று கூறப்படும் குற்றப் பரம்பரை கதையை இயக்குநர் பாலாவும் இயக்க உள்ளதால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், தான் எடுப்பதாக இருந்த குற்றப் பரம்பரை படத்தினைத் தொடங்கியுள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்ததாவது:
மனோஜ் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் இமயம் பாரதிராஜா குற்றப் பரம்பரை எனும் புதிய படத்தை  இயக்கவுள்ளார். 
குற்றப் பரம்பரை சட்டத்தை எதிர்த்து தன் உயிரை துச்சமென மதித்து, நிராயுதபாணியாக போராடிய மக்கள் மீது ஆங்கிலேயர் அரசு நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தியாகிளின் போராட்டத்தை பேராசிரியர் இரத்தினகுமார் சேகரித்து வைத்திருந்த பதிவுகளை இயக்குனர் இமயம் பாரதிராஜா உணர்வுபூர்வமாகவும், உயீரோட்டமாகவும் இயக்கவுள்ளார்.
இப்படத்தின் நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
பாரதிராஜா நடித்து இயக்கும் இப்படத்தின் பூஜை உசிலம்பட்டியில் நடைபெற்றது. நேற்றைய விழாவில் அவர் பேசியதாவது:
கைரேகைச் சட்டத்தை எதிர்த்து 1920ம் ஆண்டு இறந்த மாயக்காள் உள்ளிட்ட 16 பேரின் படுகொலையை 'குற்றப் பரம்பரை' படம் மூலமாக சொல்ல வருகிறேன். இது குற்றப் பரம்பரை அல்ல. குற்றம் சுமத்தப்பட்ட பரம்பரை.
நான் பணம் சம்பாதிக்க இந்தப் படத்தை எடுக்கவில்லை. இந்தப் படத்தை எடுக்கவே என்னைக் கடவுள் நியமித்துள்ளார். ஒரு மகத்தான இலக்கிய காவியமாக மக்களுக்கு அளிப்பேன் என்று பேசினார். பாலா எடுக்கவுள்ள குற்றப் பரம்பரை குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

அதிமுக சார்பில் திருவாடணை தொகுதியில் நடிகர் கருணாஸ் போட்டி

அதிமுகவுக்கு முக்குலத்தோர் புலிப் படை அமைப்பின் நிறுவனத் தலைவரும் நடிகருமான எஸ்.கருணாஸ் அதிமுக சார்பில் திருவாடணை தொகுதியில் போட்டியிடுகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டு வருகிறார்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகள் அதிமுக-வுக்கும், கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
 
முதல்வர் ஜெயலலிதாவை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்த எஸ்.கருணாஸ் தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள அதிமுக வேட்பாளர்களில் பட்டியலில் நடிகர் கருணாஸ் திருவாடணை தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அதிமுகவுக்கு "காமெடி" கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை ஆதரவு!

முக்குலத்தோர் புலிப்படை அமைப்புத் தலைவர் நடிகர் கருணாஸ், இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவிற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.இசையமைப்பாளராக இருந்த கருணாஸ், பாலாவின் நந்தா படம் மூலம் தமிழில் காமெடி நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.சினிமா மட்டுமின்றி, முக்குலத்தோர் புலிப்படை அமைப்புத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் கருணாஸ். 
 
இந்நிலையில், இன்று அவர் சென்னை போயஸ் தோட்டத்திலுள்ள முதல்வர் இல்லத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அப்போது, ‘வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக' அவர் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், ‘சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்வார். மற்றபடி, 234 தொகுதிகளிலும் அதிமுகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வேன்' என அவர் தெரிவித்தார்.ஏற்கனவே, திமுக சார்பாக காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அவருக்குப் போட்டியாக அதிமுக சார்பில் காமெடி கருணாஸ் களமிறக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.