முக்குலத்தோர் புலிப்படை அமைப்புத் தலைவர் நடிகர் கருணாஸ், இன்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவிற்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.இசையமைப்பாளராக இருந்த கருணாஸ், பாலாவின் நந்தா படம் மூலம் தமிழில் காமெடி நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தமிழில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.சினிமா மட்டுமின்றி, முக்குலத்தோர் புலிப்படை அமைப்புத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார் கருணாஸ்.
இந்நிலையில், இன்று அவர் சென்னை போயஸ் தோட்டத்திலுள்ள முதல்வர் இல்லத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்தார். அப்போது, ‘வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக' அவர் தெரிவித்தார்.அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கருணாஸ், ‘சட்டசபைத் தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து முதல்வர் ஜெயலலிதா முடிவு செய்வார். மற்றபடி, 234 தொகுதிகளிலும் அதிமுகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வேன்' என அவர் தெரிவித்தார்.ஏற்கனவே, திமுக சார்பாக காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அவருக்குப் போட்டியாக அதிமுக சார்பில் காமெடி கருணாஸ் களமிறக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment