Friday, April 22, 2016

செய்தி



அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைமையில் முக்குலத்தோர் அமைப்புகள் இணைந்து புதிய கூட்டணியை அமைத்துள்ளன. இக் கூட்டணி 50-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருக்கிறது.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் பி.வி.கதிரவன், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் டாக்டர் என்.சேதுராமன் ஆகியோர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகள் தேசிய மறுமலர்ச்சி இயக்கம், நேதாஜி சுபாஷ் சேனை, தீ கட்சி, மறத்தமிழர் சேனை உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள திராவிடக் கட்சிகள், நாங்கள் வளர்ந்துவிடக் கூடாது என்று ஒவ்வொரு தேர்தலிலும் செயல்பட்டு வருகின்றன.  இந்த தேர்தலிலும் கடைசி வரை ஒரு தொகுதி, இரண்டு தொகுதி தருகிறோம் எனக் கூறி ஏமாற்றிவிட்டனர்.
 தமிழக மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தை
பிளவுபடுத்தி வளரவிடாமல் செய்கின்றனர். முக்குலத்தோர் சமூகத்தின் ஒற்றுமையைக் காக்கும் வகையிலும், முக்குலத்தோரின் வாக்கு வங்கியை அடையாளப்படுத்தவும் சிங்கம் கூட்டணியை அமைத்துள்ளோம். சிங்கம் சின்னத்திலேயே போட்டியிட உள்ளோம்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை அனைத்துக் கட்சிகளும் அரசியலுக்காகப் பயன்படுத்துகின்றன.
பார்வர்டு பிளாக் கட்சி உசிலம்பட்டி, திருமங்கலம், மேலூர், முதுகுளத்தூர் உள்ளிட்ட 25 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தென்காசி, கடையநல்லூர், விளாத்திகுளம், சிவகாசி, தஞ்சாவூர், நன்னிலம், ஒரத்தநாடு உள்ளிட்ட 24 தொகுதிகளில் மூவேந்தர் முன்னணி கழகம் போட்டியிடுகிறது. மூவேந்தர் முன்னேற்றக் கழகம் போட்டியிடும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்றனர். 
விடியல் கூட்டணியைவிட, சிங்கம் கூட்டணி சிறந்தது என்பதால் இப்போது இந்த அணியில் சேர்ந்துள்ளேன் என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத் தலைவர் சேதுராமன் தெரிவித்தார்.
 
 
மதுரை மேலூர் :-
அதிமுக மதுரை,மேலூர் வேட்பாளர் வலையர் இனத்தவர் என்பதால் கள்ளர் இன மக்கள் அதிமுக மீது கடும் கோபத்தில் உள்ள இந்த நிலையில்
‪#‎பார்வட்_பிளாக்‬ இன்று சிங்கம் சின்னத்தில் ‪#‎கலைமணி_அம்பலம்‬ அவர்களை மதுரை,மேலூர் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளது
ஆக #கலைமணி_அம்பலம் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகம்....!

No comments: