Monday, April 4, 2016

தமிழ் இனத்தை காப்பாற்றவே தேர்தலில் போட்டி: சீமான்

தமிழகத்தில் தமிழினத்தைக் காப்பாற்றவே நாம் தமிழர் கட்சி சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறது என, அந்தக் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்தார்.
 
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழ் இனத்தை காப்பாற்றவே நாம் தமிழர் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடலூரில் நான் போட்டியிடுகிறேன்.
 
வருகிற 10-ஆம் தேதி இரண்டாம் கட்டப் பிரசாரத்தை தொடங்க உள்ளோம் என்றார்.

No comments: