Monday, April 25, 2016

கோவில்பட்டி அருகே தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க இளைஞர்கள் எதிர்ப்பு

கோவில்பட்டி அருகே தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க இளைஞர்கள் எதிர்ப்பு
கோவில்பட்டி அருகேயுள்ள வடக்குதிட்டங்குளத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்க்கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அங்குள்ள தேவர்சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற போது அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி – த.மா.க. கூட்டணி சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு இன்று மாலை கோவில்பட்டி அருகேயுள்ள வடக்குத்திட்டங்குளத்தில் வைகோ தனது பிரச்சாரத்தினை தொடங்கினார். அப்போது அங்குள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்றார். அப்போது அங்கியிருந்த இளைஞர்கள் சிலர் வைகோ மாலை அணிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.


 
இது தேர்தல் சமயமாக இருக்கிறது. இல்லை என்றால் 100பேர் வேல், கம்பு , அருவாளுடன் வந்தாலும் எதிர்த்து நிற்கும் சக்தி எனக்கு உண்டு, தூப்பாக்கிகள் கண்டு அஞ்சாதவன் நான் இதற்கு பயப்பட மாட்டேன், திமிரு விரைவில் அடக்கப்படும் என்றார். இதனை தொடர்ந்து இளைஞர்களின் எதிர்பினை மிறி தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து விட்டு, தெற்கு திட்டங்குளத்தில் உள்ள இம்மானுவேல் சேகரனார் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தன பிரச்சாரத்தினை தொடர்ந்தார். 

No comments: