அதிமுகவுக்கு முக்குலத்தோர் புலிப் படை அமைப்பின் நிறுவனத் தலைவரும் நடிகருமான எஸ்.கருணாஸ் அதிமுக சார்பில் திருவாடணை தொகுதியில் போட்டியிடுகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டு வருகிறார்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 227 தொகுதிகள் அதிமுக-வுக்கும், கூட்டணி கட்சிகளுக்கு 7 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
முதல்வர் ஜெயலலிதாவை நேற்று அவரது இல்லத்தில் சந்தித்த எஸ்.கருணாஸ் தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று வெளியிட்டுள்ள அதிமுக வேட்பாளர்களில் பட்டியலில் நடிகர் கருணாஸ் திருவாடணை தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment