Tuesday, November 3, 2015

ட்விட்டரில் என் பெயரில் மோசடி நடக்கிறது: கொம்பன் இயக்குநர் அறிக்கை

ட்விட்டரில் என் பெயரில் மோசடி நடக்கிறது என்று கொம்பன் இயக்குநர் முத்தையா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த அறிக்கையில் அவர் கூறியதாவது:

ஃபேஸ்புக், ட்விட்டரை நான் பயன்படுத்தியதில்லை. என் பெயரில் கணக்குகள் தொடங்கி தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். என் பெயரில் தொடர்புகொண்டு சினிமா வாய்ப்பு தருவதாக கூறி மோசடி செய்வது போன்ற தகவல்கள் என்னிடம் வருகின்றன. என்னை நேரில் சந்திக்காமல் எவ்வித பொய்யான தகவல்களையும் நம்பவேண்டாம். அதற்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல என்று அறிக்கை விடுத்துள்ளார்.

No comments: