தமிழ்த் திரையுலகில் 1980-களில் கதாநாயனாக கலக்கியவர் கார்த்திக். சில வருடங்களுக்கு முன் சினிமாவுக்கு முழுக்கு போட்டார். தற்போது நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை துவக்கி அரசியலில் குதித்தார். கார்த்திக்கை மீண்டும் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. அவர் சம்மதிக்கவில்லை. ஆனால் தற்போது ஏ.வெங்கடேஷ் இயக்கும் மாஞ்சாவேலு படத்தின் கதை பிடித்துபோக திரும்பவும் நடிக்க வந்துள்ளார். இதுபற்றி இயக்குனர் ஏ.வெங்கடேஷ் கூறியதாவது:- மாஞ்சாவேலு படத்தில் முக்கியமான அண்ணன் கேரக்டர் உள்ளது. அந்த வேடத்துக்கு கார்த்திக் பொருத்தமாக இருப்பார் என்று அணுகினோம். கதையை கேட்ட கார்த்திக் நன்றாக இருக்கிறது என்று சொல்லி உடனே நடிக்கவும் சம்மதித்தார். அருண் விஜய்யின் அண்ணனாக படம் முழுவதும் வருகிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. வருஷம் 16, கோகுலத்தில் சீதை கார்த்திக்கை இந்த படத்தில் பார்க்கலாம். சுறுசுறுப்பாக மின்சார வேகத்தில் புதுசக்தியோடு படப்பிடிப்பில் பங்கேற்கிறார். தினமும் காலை 8 மணிக்கு படப்பிடிப்பில் ஆஜராகி விடுகிறார். மாலை வரை படப்பிடிப்பு அரங்கிலேயே இருந்து காட்சிகளை முடித்து கொடுத்துவிட்டு புறப்படுகிறார். இந்தப் படம் அவருக்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்றார்.
No comments:
Post a Comment