Sunday, August 24, 2014

ஒரு நிமிடம் வாசித்து பாருங்கள்!!! - ஆனந்த் தேவன்


முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திய முதல்வருக்கு 5மாவட்ட விவசாயிகள் சார்பில் மதுரையில் பாராட்டு விழா எடுக்கிறார்கள் இந்த பாராட்டு விழாவிற்கு சொந்தமான விழா நாயகன் ஒருவர் இருக்கிறார் யார் என்று ஆவலோடு வரலாற்றின் பக்கங்களை சற்று பின்னோக்கி புரட்டிபார்க்கலாம் 2002ம் ஆண்டு டெல்லி உச்சநீதிமன்றத்தில் முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவேண்டும் என்று கேரள அரசிற்கு எதிராக ஒரு நபரால் வழக்கு தொடங்கபடுகிறது அந்த நபர் தான் தொடங்கிய பொதுநல வழக்கிற்காக தனது பல லட்சம் சொத்துகளை விற்று விவசாய நலன் ஒன்றே தனது குறிக்கோளாக கொண்டு இறுதி வரை போராடுகிறார் அதன் விளைவு 2006ம் ஆண்டு முல்லைபெரியாற்று அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்திக்கொள்ளலாம் என தீர்ப்பு அளித்தது உச்சநீதிமன்றம் இதை ஏற்க கேரள அரசு தயராகவில்லை பின்பு 2011ம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி கேரள அரசை கண்டித்து மதுரையில் ஒரே நாளில் பல லட்சம் மக்களை திரட்டி பிரம்மாண்ட பேரணியை நடத்தி காட்டினார் அந்த சரித்திர நாயகன் திரு.சீமான் என்கிற மீனாட்சி சுந்தர அம்பலம் இவர் தான் இன்றைய மதுரை பாராட்டுவிழாவின் ஆணிவேர் இன்றைக்கு நம்முடன் இவர் இல்லை என்றாலும் இந்த தியாக உள்ளத்தை மறந்துவிடாமல் கெளரவ படுத்தினால் நலம் வரலாற்றை மறக்காதே!மறவாதே!

No comments: