Sunday, August 24, 2014

மதுரை ‪#‎பாண்டிகோவில்‬ வரலாறு :


"மேரியோ, மாரியோ, பத்மாவோ, பாத்திமாவோ... யார் வேண்டுமானாலும் கோவிலுக்கு வருகிறார்கள். கர்ப்பக்கிரகம் வரை சென்று பாண்டியைத் தரிசிக்கிறார்கள் " பல வருடங்களுக்கு முன்னால் இந்த இடம் பழைய மதுரைனு சொல்லப் பட்டது. கரூர் அருகே உள்ள நெரூர் கிராமத்தில் ஒரு குறிப்பிட்ட வம்சத்தைச் சேர்ந்த வள்ளியம்மை பிழைப்பு தேடி மதுரை மாநேரியில் குடியேறினார். வள்ளியம்மை கனவில் பலமுறை சாமி வந்து, மேலமடை கிராமத்தில் தான் புதைந்திருக்கும் இடத்தைச் சொல்லியது. ஆனா அந்த அம்மா கனவை பெருசா எடுத்துக்கல. ஆனா கனவு தொடர்ந்து வரவும் கிராம மக்கள் கிட்ட.இந்தக் கனவைச் சொல்லியிருக்கார். உடனே வண்டியூர், உத்தங்குடி, கருப்பாயூரணி கிராம மக்களோட.மேலமடை மக்களும் சேர்ந்து வள்ளியம்மை கனவில் சாமி சொன்ன இடத்தைத் தோண்டியபோது, உருட்டிய விழிகள், முறுக்கிய மீசை, அடர்ந்து நீண்டு வளர்ந்த ஜடாமுடியோடு சம்பணமிட்ட தவக்கோலத்தில் சாமி சிலை கிடைத்தது. அந்த சிலையை வெளியே எடுத்து, ஒரு குடிசை போட்டு சிலையை வைத்து கும்பிடத் தொடங்கினார்கள். ஜடாமுனீஸ்வரர் கோவில் என மக்கள் மத்தியில் பிரபலமானது. வள்ளியம்மை அம்மாதான் பூசாரியாக இருந்தார். அப்போது அடர்ந்த காட்டுப்பகுதியாக நடக்கக்கூட சரிவர பாதையில்லாத காலம். கம்பீரமாக இருக்கிற ஜடாமுனியைப் பார்த்து மக்கள்- குறிப்பாக குழந்தைகள் அச்சப்பட்டதாம். நீண்டு வளர்ந்த ஜடாமுடியைப் பார்த்து சாமியை இரும்புச் சங்கிலியால் கட்டி வைத் திருப்பதாக மக்கள் நினைத்துக் கொண்டார்கள். அந்தக் காலத்திலேயே கோவில் பிரபலமாகிவிட, வெள்ளைக்கார அரசாங்கம் கோவிலுக்கு சில சட்ட திட்டங்களைப் போட்டது. இதேபோல் எல்லா கோவில்களுக்கும் சட்டங்கள் போட்டது. ஆனால் வள்ளியம்மை நீண்ட போராட்டம் நடத்தியதன் விளைவாக 1930-களில் ‘"அரசு சட்டங்களிலிருந்து விலக்கு அளிக் கப்பட்ட கோவில்' என்ற பெருமை யைப் பெற்றது. இப்போதும் தமிழக அரசின் அறநிலையத்துறையின் ‘"அன்ன தானம்' உள்ளிட்ட சில சலுகை களைப் பெற்றாலும், இது விலக்கு அளிக்கப்பட்ட கோவில்தான். வள்ளியம்மையின் வம்சாவழியினர் தொடர்ந்து கோவில் பூசாரிகளாக இருந்து வந்தனர். எனது தாத்தா பாண்டி இந்தக் கோவிலில் பூசாரி யாக இருந்தபோது "பாண்டி பூசாரி கோவில்' என.அழைக்கப்பட்டு, நாளடைவில் ஜடாமுனீஸ்வரர் என்பது மாறி பாண்டி முனீஸ்வரர் கோவில் ஆனது. பக்தர்கள் கோரிக்கை யில் நியாயம் இருந்தா... அதை உடனே நிறை வேத்தி வைப்பார் பாண்டி முனி. பில்லி, சூன்ய, ஏவல்களில் பாதிக்கப்பட்ட வங்க பாண்டிகிட்ட முறை யிட்டா உடனே சரி பண்ணுவார். குழந்தையில்லாதவர்கள் தூளிகட்டி வேண்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்'' என பாண்டி கோவில் வரலாற்றைச் சொன்னார் சிவாஜி பூசாரி. பொதுவாக இந்துக்கள் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில்தான் கோவிலுக்குப் போவது வழக்கம். ஆனால் "நல்லவருக்கு ஏது நாளும் கிழமையும்' என்பதுபோல... செவ்வாய், வெள்ளியோடு ஞயிற்றுக்கிழமை ரொம்ப விசேஷமாக இருக்கிறது. அன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. மேரியோ, மாரியோ, பத்மாவோ, பாத்திமாவோ... யார் வேண்டுமானாலும் கோவிலுக்கு வருகிறார்கள். கர்ப்பக்கிரகம் வரை சென்று பாண்டியைத் தரிசிக்கிறார்கள். இப்படி சமயங்களைக் கடந்த சாமியாக இருக்கிறார் பாண்டி. பொதுவாக வீடுகளில் வெள்ளி, செவ்வாயில் அசைவம் சமைக்காத- உண்ணாத இந்துக்கள்கூட குடும்பம் குடும்பமாக வந்து ஆட்டுக் கெடா வெட்டி அங்கே சமைத்து உண்ணு கிறார்கள். செவ்வாய்க் கிழமையில் 200 கெடா வெட்டு, வெள்ளிக் கிழமையில் 400 கெடா வெட்டு, ஞாயிற்றுக் கிழமையில் 500 கெடா வெட்டு நடக்கிறது. அந்த சுற்றுப் பகுதியெங்கும் கறிக்குழம்பு வாசம் கமகமக்கிறது. ஆனாலும் பாண்டிமுனி சைவச்சாமி என்கிறார் சிவாஜி பூசாரி. நமக்கு திகைப்பாகத்தான் இருக்கிறது. ""பாண்டி- ஆண்டி- சமயன் என மூன்று தெய்வங்கள் இங்கே இருக்கு. பாண்டிக்குக் கட்டுப் பட்டவர் ஆண்டி. அவருக்கு சுருட்டு வைத்து பக்தர்கள் வேண்டிக் கொள்வார்கள். ஆண்டிக்கு விருப்பமானது மாம்பழ பூஜை. பாண்டிக்குக் காவலாக இருப்பது சமய கருப்பு சாமி. பாண்டி நிறைவேற்றிய கோரிக்கைகளுக்குப் பிரதிபலனாக மக்கள் கெடா வெட்டுவது கருப்புக்குத்தான். பாண்டி சைவச்சாமி. பொங்கல் படையல், நெய், பால், பன்னீர், சந்தன அபிஷேகம்தான் பாண்டிக்கு இஷ்டம். அதை மீறி பாண்டிக்கு எது கொடுத்தாலும் பக்தர்களின் இஷ்டத்தை ஏற்றுக் கொள்கிறார் பாண்டி''’என்கிறார் சிவாஜி பூசாரி. லாரிகளில், டிராக்டர்களில், பஸ்களில், வேன்களில் கூட்டம் கூட்டமாக வந்தபடியே இருக்கிறார்கள் மக்கள். நிறைவேறின கோரிக்கைக்காக நேர்த்திக்.கடன் செய்ய வரும் பழைய பக்தர்கள், கோரிக்கை வைப்பதற்காக வரும் புதிய பக்தர்கள் என எல்லா நாளும் திருவிழாவாக இருக்கிறது பாண்டி கோவிலில். சமய பேதங்களைக் கடந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார் இந்த சைவ முனி.

1 comment:

Vel Murugan said...

I like pandikovil pandi sami