ஏப்ரல் 10,2015 வெள்ளிகிழமை மாலை 3 மணி அளவில் மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை அருகே தேசபக்தி தமிழர் முழக்கம் நடத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!!
*ஆறாம் வகுப்பு சமச்சீர் பாட புத்தகத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பெயர்கள் அவமதிக்கபடிருப்பதை கண்டித்தும்,அதனை உடனடியாக திருத்தம் செய்ய கோரியும்,
*சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பெயர் முத்துராமலிங்கர் என குறிபிட்டிருபதை கண்டித்தும்,
*நாள்காட்டிகளில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த மற்றும் நினைவு தினத்தை ( தேவர் ஜெயந்தி குரு பூஜை ) அச்சிட தவறிய அச்சகங்கள் மற்றும் அவர்களை பனித்த விளம்பர வணிகர்களை கண்டித்தும்,
*பேருந்து நிலையங்கள்,ரயில் நிலையங்கள்,துறைமுகங்கள்,விமான நிலையங்கள்,அரசு பெரிய மருத்துவமனைகள்,பொது நூலகங்கள் போன்ற மக்கள் பயன்பாட்டில் உள்ள பொது இடங்களுக்கு இந்திய சுதந்திர போராட்ட வீரர்களான வாஞ்சிநாதன்,திருப்பூர் குமரன்,சுப்ரமணிய சிவா,வ.உ.சிதம்பரம் பிள்ளை,பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், போன்றோர் பெயர்களை சூட்ட வலியுறுத்தியும்,
*நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் பிறந்த தினத்தை தேச பக்தி தினமாக அறிவிக்க கோரியும்,
*அணைத்து கல்லூரிகளிலும் மாணவ மாணவியருக்கு அவர்களின் குடும்ப பொருளாதாரத்தின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை சரி சமமாக வழங்க வேண்டும்,தற்பொழுது உள்ள சாதி அடிப்படையிலான உதவித்தொகை வழங்கும் முறையை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும்,
*வரும் கல்வி ஆண்டுகளில் அணைத்து கல்லூரிகளில் ( கலை,பொறியியல்,மருத்துவம் ) பயிலவிருக்கும் ஏழை,எளிய,நடுத்தர குடும்ப மாணவ மாணவியருக்கு வட்டி இல்லா கல்விகடன் வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தியும்
*பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் பெயரை முத்துராமலிங்கம் என பிரசுரித்த தந்தி தொலைகாட்சியை கண்டித்தும்,
இன்ன பல கோரிக்கைகளை முன்வைத்தும் மாபெரும் ஆர்ப்பாட்டம்!!!
இவண்: தேசபக்தி தமிழர் முழக்கம் ( உண்மையை சொல். உறுதியாய்ச் சொல். இறுதிவரை சொல்.)
No comments:
Post a Comment