Tuesday, May 19, 2015

சுவாமி கே.பி.ராமகிருஷ்ணன் மறைவு: ஏ.சி.சண்முகம் இரங்கல்

வீரப் பேரரசு மருது பாண்டியர் எழுச்சி இயக்கத்தின் ஆசான் சுவாமி கே.பி.ராமகிருஷ்ணன் மறைவுக்கு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘சிவகங்கையை ஆண்ட மருதுபாண்டியர்களின் மீது தீராத பக்தி கொண்டவர் சுவாமி கே.பி.ராமகிருஷ்ணன். தைப்பொங்கல் நாளில் மதுரையில் மாமன்னர்களின் திருவுருவ சிலைக்கு பொங்கலிடும், விழா நடத்தியும் அவர்கள் நினைவு நாளில் மாமன்னர் நினைவிடங்களில் குரு பூஜை செய்தும் உண்மை தொண்டனாக தன்னை ஆர்ப்பணித்து கொண்டவர்.
அவர் விட்டு சென்றுள்ள திருப்பணிகளை, அவருடைய வழி நடப்பவர்கள் தொடர்ந்து எவ்வித தொய்வுமின்றி செய்திட வேண்டும். சுவாமிஜியை பிரிந்து வாடும் வீரப்பேரரசு மருதுபாண்டியர் எழுச்சி இயக்கத்தினருக்கும் சுவாமியின் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன்’’ என்று கூறியுள்ளார்.

No comments: