Monday, March 7, 2016

மீன்குழம்பும் மண்பானையும்... சிறப்புத் தோற்றத்தில் கமல் ஹாஸன்!

சிவாஜி கணேசன் குடும்பத்தினர் தயாரிக்கும் மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் நடிகர் கமல் ஹாஸன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் மற்றும் அபிராமி துஷ்யந்த்தின் இஷான் புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, பிரபு, காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடிக்கும் படம் மீன் குழம்பும் மண் பானையும். இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் கமல்ஹாசன் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். 'இது நடிகர் திலகத்தின் மீதும், அவர்கள் குடும்பத்தின் மீதும் கமல் கொண்டுள்ள அன்பின் காரணமாகவே சாத்தியமானதாக' மலேசியாவில் படப்பிடிப்பை முடித்து திரும்பி இருக்கும் இயக்குநர் மற்றும் படக்குழுவினர் தெரிவித்தனர். 
 
இத்திரைப்படத்தில் பூஜா குமார், ஆஸ்னா சவேரி, ஊர்வசி, எம் எஸ் பாஸ்கர், சந்தானபாரதி, ஆர் எஸ் சிவாஜி மற்றும் பலர் நடிக்கின்றனர்.இத்திரைப்படத்திற்கு இமான் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். அமுதேஷ்வர் இயக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஜே லக்ஷ்மண் குமாரும், படத்தொகுப்பை ரிச்சர்ட் கெவினும் கலையை எம் பிரபாகரனும், தயாரிப்பு மேற்பார்வையை எஸ் ஆனந்த் வாண்டையாரும், கள தயாரிப்பை ஆர் எஸ் சிவாஜியும் கவனிக்கிறார்கள்.

No comments: