நடிகர் கார்த்திக், வரும் 6-ம் தேதி கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் சேது ராம பாண்டியனின் சிலை திறப்பு விழாவை நெல்லையில் நடத்துகிறார். அதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டி ருக்கும் அவர், ‘தி இந்து வு’க்கு அளித்த பேட்டி:
யாருடன் கூட்டு சேர்வீர்கள்?
மிக முக்கியமான கட்சியுடன் கூட் டணி பேச்சுவார்த்தை நடந்து கொண் டிருக்கிறது. இன்னும் ஓரிரு நாட்களில் ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும். நெல்லை சிலை திறப்பு விழாவில் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்போம். கவுரவமான எண்ணிக் கையில் தொகுதிகளை கேட்டுப் பெறு வோம்.
தமிழகத்தில் இந்த முறை முதல்வர் வேட்பாளர்கள் நிறைய பேர் களத்தில் இருக்கிறார்களே?
ஜனநாயக நாட்டில் யாருக்கும் ஆசைப்பட உரிமை உண்டு. விஜய காந்த், வைகோ, அன்புமணி அனை வரையுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால், இவர்கள் எல்லாம் தனித்தனியாக நின்று முதல்வர் ஆக முடியாது. திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிட இயக்கங்களும் தமிழக மக்களின் ரத்தத்தில் ஊறிக் கிடப்பதால் இவ்விரு கட்சிகளைத் தவிர வேறு யாரும் இப்போதைக்கு ஆட்சிக்கு வரமுடியாது.
இந்தத் தேர்தலில் ‘கிங்’ ஆக இருக்கப் போவதாக விஜயகாந்த் சொல்லி இருக்கிறாரே?
என்னைக் கேட்டால், இந்தத் தேர்தலில் அவர் ’கிங்’ ஆக இருப் பதைவிட ‘கிங் மேக்கராக’ இருப்பதே நல்லது. சில நேரங்களில் ‘கிங்’கைவிட ‘கிங் மேக்கர்’களுக்குத்தான் மரியாதை யும் அதிகம்; ரிஸ்க்கும் குறைவு.
அதிமுக ஆட்சி குறித்து?
இதற்கு இப்போதே பதில் சொல்லி விட்டால் 6-ம் தேதி சஸ்பென்ஸ் இல்லாமல் போய்விடுமே. தமிழக மக்கள் ரொம்பவே புத்திசாலிகள். சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார்கள்.
மத்திய பாஜக ஆட்சி குறித்த உங்களது மதிப்பீடு?
இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டது. பாஜக தலைவர்கள் இன்னமும் கனவு வியாபாரிகளாகவே காலம் தள்ளு கின்றனர். காலாவதி ஆன பொருட்கள் மீது லேபிளை ஒட்டி விற்பது போன்ற ஒரு ஆட்சி மத்தியில் நடக்கிறது. நரேந்திர மோடி நல்ல பேச்சாளி. பிரதமராக இருக்க தகுதியற்றவர்.
No comments:
Post a Comment