சாதாரணமாக யாரும் இறந்துவிட்டால், அடக்கம் செய்துவிட்டு வரும்வழியில் பாதிக்கப்பட்டவரோடு அங்காளி பங்காளிகளும் சேர்ந்து குளித்துவிட்டு இறந்தவர் வீட்டுக்கு வருவார்கள்!
யாவரும் அறிந்ததே!!
இதற்குள் அந்த வீட்டை சுத்தம் செய்வதோடு, பாதிக்கப்பட்ட பெண்களையும் குளிக்க வைத்திருப்பார்கள்!
மாமன், மைத்துனர் உறவுகள் தங்களால் இயன்ற உணவை தயாரித்து பாதிக்கப்பட்டவர்களோடு, ஏழை, பணக்காரர், வயது வித்தியாசம் இல்லாமல் பங்காளிகளையும் ஒருசேர உட்கார வைத்து உணவு பரிமாறுவார்கள்!
ஒரு இலையில் இருக்கும் உணவுக்கும் பக்கத்து இலையில் இருக்கும் உணவுக்கும் வித்தியாசம் வர வாய்ப்புகள் நிறையவே உண்டு!
இதெல்லாம் எதற்காக?
மாண்டவர் மீண்டு வர போகிறாரா?
நிச்சயமாக இல்லை!!
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர் நினைவிலையே இருக்காமல்,
" புதிய வாழ்க்கையை தொடங்கு"
நாங்கள் இருக்கிறோம் என ஒரு அசாத்திய நம்பிக்கையை உண்டாக்க தான்!
மறுநாள் இந்த உறவுகள் உதவுவார்களா அல்லது மாட்டார்களா? என்பதல்ல கேள்வி!
ஆனால் இந்த இக்கட்டான நேரத்தில் கூட்டமாக மனதைரியம் கொடுத்து அவர்களை, அன்றாட வேலைக்கு திருப்புவது தான், கிராம கூட்டு இனத்தாரின் பிரதான நோக்கம்!
*** *** ***
அறிவியல் தாண்டிய
" கொரோனோ" வின் கோரபசியை சமாளிக்க,
நமக்கு நாமே மனதைரியம் கொடுக்க,
130 கோடி இந்தியர்கள் ஒரே நேரத்தில் தன்னம்பிக்கையுடன் ஒளியேற்றுவோம்!
ஜெய் ஹிந்த்!!
மாரிமுத்து
பொது செயலாளர் சீர்மரபினர் நலக்கூட்டமைப்பு
அனைத்து மறவர்கள் கூட்டமைப்பு
No comments:
Post a Comment