Thursday, February 3, 2011

உசிலம்பட்டி தொகுதியில் நடிகர் கார்த்திக் போட்டியிட வேண்டும்; பார்வர்டு பிளாக் தீர்மானம்


சென்னை, பிப்.1-
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. மாநில தலைவர் நவமணி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கதிரவன் தீர்மானங்களை விளக்கி பேசினார்.
கூட்டத்தில் வருகிற சட்டசபை தேர்தலில் நடிகர் கார்த்திக், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிட வேண்டும், பார்வர்டு பிளாக்கட்சிக்கு அ.தி.மு.க. தலைமை 10 தொகுதிகளை ஒதுக்கி தரவேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் சென்னை மாவட்ட செயலாளர் பாலாஜி நன்றி கூறினார்.

No comments: