Friday, July 29, 2011

அக்டோபர் 3-ல் ராணா ஷுட்டிங் தொடக்கம்

ரஜினி 3 வேடங்களில் நடிக்கும் படம் "ராணா". இப்படத்தின் கதை 17-ம் நூற்றாண்டில் நடப்பது போல் உருவாக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் தொடக்கவிழா கடந்த ஏப்ரல் 29-ம் தேதி தொடங்கப்பட்டது. அப்போது ரஜினிகாந்த்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு உயர்தர சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து கடந்த 13ம் தேதி சென்னை திரும்பினார். அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ரஜினியும் உற்சாகமாக காணப்பட்டார். இருப்பினும் டாக்டர்கள் அறிவுரைப்படி தனது இல்லத்தில் அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.அடிக்கடி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் ராணா பட விவாதங்களிலும் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் ராணா பட ஷுட்டிங்கை விரைவில் நடத்துவது பற்றி ரஜினியும், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும் ஆலோசனை நடத்தினர். இதன்படி வரும் அக்டோபர் 3ம் தேதி முதல் ஷுட்டிங் தொடங்கி தொடர்ந்து 100 நாட்கள் இடைவிடாமல் படப்படிப்பை நடத்த முடிவெடுத்துள்ளனர்.

ரஜினி பங்கேற்கும் காட்சிகள் மட்டும் சில நாட்கள் இடைவெளி விட்டு படமாக்கப்படும். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் பல லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரஜினி மன்னராக நடிக்கும் காட்சிகளுக்காக பிரமாண்டமான கப்பல் செட் ஒன்றும் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: