Monday, July 25, 2011

உள்ளூராட்சித் தேர்தல்கள்: வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி

வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி
ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2011 07:41


நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 65 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 45 சபைகளை கைப்பற்றியுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி 18 உள்ளூராட்சி சபைகளை வென்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி 2 பிரதேச சபைகளை கைப்பற்றியது.

வடக்கு கிழக்கில் இலங்கை தமிழரசுக் கட்சி (தமிழ் தேசிய கூட்டமைப்பு) பெரு வெற்றி பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் தேர்தல் நடைபெற்ற 16 சபைகளில் 13 சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி வென்றது. ஊர்காவற்துறை, நெடுந்தீவு, வேலணை பிரதேச சபைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச சபை, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபை என்பனவும் தமிழரசு கட்சி வசமாகின. கிளிநொச்சியின் பச்சிலைப்பள்ளி மற்றும் கரைச்சி பிரதேச சபைகளை தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது.
அம்பாறையில் தேர்தல் நடைபெற்ற காரைதீவு பிரதேச சபை மற்றும் திருக்கோவில் பிரதேச சபைகளை தமிழரசுக் கட்சி கைப்பற்றியது.

திருகோணமலையில் பட்டணமும் சூழலும் பிரதேச சபை தமிழரசுக்கட்சி வசமானது. அங்கு தேர்தல் நடந்த குச்சவெளி, சேருவில,கந்தளாய் பிரதேச சபைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியது.

இத்தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன ஒரு சபையையும் கைப்பற்றவில்லை.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/25204--45-18.html


யாழ் மாவட்டத்தில் அரசாங்கக் கட்சி சார்ந்தவர்கள் தேர்தல் பிரசாரங்கள் முடிவடைந்த பின்னரும் வாக்காளர்களைக் கவர்வதற்கு நிவாரணப் பொதிகளை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

கிளிநோச்சியில் பல இடங்கலில் வெள்ளி இரவு முகமூடி அணிந்த நபர்கள் ஆயுதங்களை காட்டி மக்களிடமிருந்த வாக்குச் சீட்டுக்களை பறித்து சென்றுள்ளனர்.

சில இடங்களில் வாக்களிக்க பணம் கொடுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் வாக்காளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.



நன்றி: பிபிசி

No comments: