Saturday, November 26, 2011

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை உடனே திரும்ப பெற வேண்டும்

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை 51 சதவீதமும், ஒரு பொருளின் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டை 100 சதவீதமும் அனுமதிக்கும் மத்திய அரசின் முடிவு கடும் கண்டனத்துக்குரியது. இதனால் சில்லரை வணிகம் முற்றிலும் அழிந்துவிடும். சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரம் பறிபோகும். தமிழ்நாட்டில் மட்டும் 10 லட்சம் சிறு வியாபாரிகள் உள்ளனர். அவர்களை நம்பி 50 லட்சம் மக்கள் இருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து கிராம பொருளாதாரம், நெசவு, உள்ளூர் தொழில்கள் என ஓட்டு மொத்தப்பொருளாதாரமும் செயலிழக்கும் நிலை ஏற்படும். வேலை இல்லாத் திண்டாட்டம் ஏற்பட்டு மக்கள் வீதிக்கு வரும் நிலை ஏற்படும். ஆகவே மத்திய அரசு துளியும் யோசிக்காமல் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டினை அனுமதிக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments: