Monday, June 17, 2013

தமிழக அமைச்சரவையில் மாற்றம் ;இன்று 2 பேர் நீக்கம்; 2 பேர் சேர்ப்பு

தமிழக அமைச்சரவையில் இன்று அமைச்சர்கள் 2 பேரை முதல்வர் ஜெ., நீக்கினார். புதிதாக 2 பேரை நியமித்துள்ளார். ஏற்கனவே இது வரை ஆட்சி பொறுப்பேற்றது முதல் 8 முறை முதல்வர் ஜெ., தனது அமைச்சரவை சகாக்களை மாற்றி வந்துள்ளார். தற்போது 9 வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.




இன்று முதல்வர் ஜெ., தனது அரசில் அமைச்சர்களாக இருந்த செல்லப்பாண்டியன், முகம்மது ஜான் ஆகியோர் நீக்கி உள்ளார். இவர்களுக்கு பதில் எஸ்.பி., சண்முகநாதன், அப்துல்ரகீம் ஆகியோர் புதிததாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் முறையே சுற்றுலா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.







மேலும் செந்தூர்பாண்டியன், பச்சைமால், ஆனந்தன் ஆகியோர்களின் துறை மாற்றப்பட்டுள்ளது. இவர்களுக்கு முறையே இந்து சமய அறநிலைய துறை, வனத்துறை ,தொழிலாளர் துறை வழங்கப்பட்டுள்ளது.





No comments: