Monday, June 10, 2013

சென்னை - திருச்சி - மானாமதுரை சிலம்பு எக்ஸ்பிரஸ் ஜூன் 22 முதல் இயங்கும் என டி.ஆர்.பாலு தகவல்

சென்னை- திருச்சி - காரைக்குடி சிலம்பு எக்ஸ்பிரஸ் புதிய ரயில் சேவை ஜூன் 22ஆம் தொடங்குவதற்கு ரயில்வே வாரியம் முடிவெடுத்திருந்தது. இதனையடுத்து பொது மக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் இந்த ரயில் சேவையை மானாமதுரை வரை நீட்டிக்க வேண்டும் என்று வற்புறுத்தியதின் அடிப்படையில், சென்னை - திருச்சி -காரைக்குடி - தேவகோட்டை வழியாக மானாமதுரை வரை இயக்கப்படும் என ரயில்வே வாரியம் இப்போது ஒப்புதல் அளித்துள்ளது.




இந்த ரயில் சென்னையிலிருந்து இரவு 8.20க்கு புறப்படும். திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, தேவகோட்டை வழியாக மறுநாள் காலை 7.45க்கு மானாமதுரை சென்றடையும். மறு மார்க்கத்தில் மானாமதுரையிலிருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூருக்கு காலை 6.30க்கு சென்றடையும். இந்த புதிய எக்ஸ்பிரஸ் சேவை சென்னையில் இருந்து புதன் மற்றும் சனி கிழமையும், மானாமதுரையிலிருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் ஆக வாரம் இரண்டு முறை இயக்கப்படும் என ரயில்வே வாரியத் தலைமை அதிகாரிகள் திமுக நாடாளுமன்றக்குழுத் தலைவரும், ரயில்வே நிலைக்குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவிடம் தெரிவித்துள்ளனர். இந்த ரயில் சேவையானது முன்னர் அறிவிக்கப்பட்ட அதே தேதியிலிருந்து (ஜூன் 22) இயக்கப்படும். என டி.ஆர். பாலு அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

No comments: