Saturday, November 22, 2014

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்த்துவதால் ஏற்படும் பலன்கள்


முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்ததால் கூடுதலாக 1.5 டி.எம்.சி. தண்ணீரால் 2.8 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். அணை நீர்மட்டம் 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்ந்ததன் மூலம் கூடுதலாக 1.5 டி.எம்.சி. நீரை தேக்கலாம். ஒரு டி.எம்.சி. மூலம் 10 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். எனினும் 2.8 லட்சம் ஏக்கரிலும் விளைந்த பயிரை காப்பாற்ற இந்த தண்ணீர் போதுமானது. இதனால் தற்போது கிடைக்கப்பெறும் 1.5 டி.எம்.சி. கூடுதல் தண்ணீரால் 2.08 லட்சம் ஏக்கரும் பயன்பெறும். 152 அடி வரை தேக்கினால் 4.5 டி.எம்.சி. தண்ணீர் தேக்கலாம். தமிழகத்துக்கு ஆண்டுதோறும் சராசரியாக 15 டி.எம்.சி. தண்ணீர் பெறப்படுகிறது. அதிகபட்சம் 30 டி.எம்.சி.யும், வறட்சி காலத்தில் 8 முதல் 10 டி.எம்.சி. வரையிலும் தண்ணீர் எடுக்கபட்டு உள்ளது. 1979 ஆண்டுக்கு பின்னர் அணை நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டதால் 10 முறை அணை நிரம்பி தண்ணீர் வீணாக வெளியேறி உள்ளது. ஒரு முறை ஒரு டி.எம்.சி முதல் 3 டி.எம்.சி. வரை தண்ணீர் இடுக்கி வழியாக கடலில் சென்று உள்ளது. 14.11.2006 முதல் 1.12.2006 வரையிலான காலத்தில் மட்டும் சுமார் 4.2 டி.எம்.சி. வீணாக கடலுக்கு சென்று உள்ளது. 142 அடியாக உயர்த்துவதால் ஏற்படும் பலன்கள்: தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்கள் கூடுதலாக ஒன்றரை லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும். மதுரை நகரில் தற்போது ஏற்பட்டு வரும் குடிநீர் தட்டுப்பாடு முழுமையாக நீங்கும். வறண்ட மானாவாரி நிலங்கள் செழித்து வருவதும், தேனி மாவட்டத்தில் செயல்படாமல் உள்ள 18–ம் கால்வாய் முழுமையாக செயல்படும். இதன்மூலம் 46 குளங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு கம்பம் முதல் தேவாரம் வரை 4,000 ஹெக்டேர் நிலங்கள் புதிய பாசன வசதி பெறும். மதுரை மாவட்டம் 3 போக சாகுபடியும், மேலூர் முதல் கள்ளந்தரி வரை தற்போது நடைபெறும் ஒருபோக சாகுபடி, 2 போக சாகுபடியாகவும், வறண்ட ராமநாதபுரம் மாவட்டம் செழிப்படைந்து ஒருபோக சாகுபடி வசதி பெறும். விவசாய நிலங்கள் சுருங்கியதால் 5 மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான விவசாய தொழிலாளர்கள் வேலை தேடி வெளியூர்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் சென்றுவிட்டனர். அணையில் 142 அடியாக தண்ணீர் உயரும் பட்சத்தில் கூடுதல் விவசாய நிலங்கள் ஏற்பட்டு வெளியூரில் இருக்கும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பிவரும் நிலை ஏற்படும்.

No comments: