Friday, November 14, 2014

புதுமலர் பிரபாகரன்


திரை நடிகர், அண்ணன் மு.கார்த்திக் அவர்கள் மீது நான் வைக்கும் 'எதிர்கருத்து' யாவையும் அவரது 'செயல்பாடின்மை' குறித்த ஆதங்கம் தான். அதே போல, திரைத்துறையினர் எந்த வடிவிலும் அரசியல் தலைமை ஏற்பதை ஏற்பதில்லை என்பதில் இன்றளவும் உறுதியுடன் இருக்கிறேன். விருதுநகர், இராஜபாளையம் பகுதியில் மறவர் மாநாட்டிற்காக சுற்றுப்பயணம் மேற்கொண்ட தருணத்தில் 'அப்பகுதி மக்களிடம் கார்த்திக் நீக்கமற நிறைந்திருப்பதை' உணர முடிகிறது. இப்பெருந்திரள் இளைஞர்களின் விசுவாசம் என்பது முத்துராமனின் மகன் என்கிற நிலையிலேயே தேங்கி விடுவது கார்த்திக் அவர்களின் ஆளுமை தோல்வியே ! அதைவிட, தொடர்ந்து ஊடகங்கள் 'அவரை குழப்பவாதியாகவும், அரசியல் காமெடியாளராகவும் சித்தரித்து வருவதை அப்பட்டமாக உணர' முடிகிறது. அவரை தொடர்ந்து இப்படியே வைத்திருப்பதில் 'பல உளவியல்கள்' கவனமாக இருக்கின்றனர். அவரது திரை பலம் தேவராக திரண்டு விடக்கூடாது என்பதில்... அவரும் 'எதையும் அறியாதவராக தொடர்ந்து நடை போடுவது' மீண்டும் பத்திரிக்கை செய்தியாவதற்கே பயனளிக்கும் புதுமலர் பிரபாகரன்

No comments: