Saturday, December 12, 2015

நேதாஜியின் இறுதி நாள்கள் குறித்த இணையதளம் லண்டனில் தொடக்கம்

நேதாஜி சுபாஸ் சந்திர போஸின் இறுதி நாள்கள் குறித்த ஆவண ஆதாரங்களை அளிக்கும் புதிய இணையதளம், லண்டனில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
 பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகையாளரும், போஸின் பேரனுமான ஆஷிஸ் ரே, தன் வசமுள்ள ஆவணங்களை வெளியிடும் வகையில், www.bosefiles.info என்ற அந்த இணையதளத்தைத் தொடங்கியுள்ளார்.
 இதுகுறித்து, அவர் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில், சுபாஷ் சந்திர போஸுக்கு உண்மையிலேயே என்ன நேர்ந்தது? என்பதை வெளிக்கொணரும் நோக்குடன், இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது என்றார் ஆஷிஸ் ரே.

No comments: