Wednesday, May 18, 2016

வீடியோ: கார் விபத்து பாதுகாப்பு சோதனையில் ஸ்கார்பியோ உட்பட ஐந்து முக்கிய கார்கள் தோல்வி

லண்டனில் நடத்தப்பட்ட கார் விபத்து பாதுகாப்பு சோதனையில் ஸ்கார்பியோ உட்பட இந்தியாவை சேர்ந்த ஐந்து முக்கிய கார்கள் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வீடியோ: கார் விபத்து பாதுகாப்பு சோதனையில் ஸ்கார்பியோ உட்பட ஐந்து முக்கிய கார்கள் தோல்வி
லண்டன்:

லண்டனில் நடத்தப்பட்ட கார் விபத்து பாதுகாப்பு சோதனையில் ஸ்கார்பியோ உட்பட இந்தியாவை சேர்ந்த ஐந்து முக்கிய கார்கள் தோல்வி அடைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தை சேர்ந்த தன்னார்வ அமைப்பு ஒன்று ‘உலகளாவிய புதிய கார் மதிப்பீட்டு திட்டம்’ என்ற பெயரில் பொதுமக்கள் பயன்படுத்தும் கார்களின் பாதுகாப்பு வசதிகளை சோதனை நடத்தி மதிப்பீடு செய்து வருகிறது. தற்போது இந்த அமைப்பு உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் 17 கார்களை விபத்து பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தி மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் 5 கார்கள் உட்பட மொத்தம் 7 கார்கள் ஐந்துக்கு ஒரு ஸ்டார் கூட பெறாமல் தோல்வி அடைந்துள்ளன. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ரெனால்ட் க்விட், மாருதி சுசூகி சேலேரியோ, மாருதி சுசூகி ஈகோ, மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் ஹூண்டாய் இயான் ஆகியவை விபத்து சோதனையில் பூஜ்யம் மதிப்பெண்கள் பெற்றுள்ளன.

இந்தியா உலகின் 6-வது மிகப்பெரிய வாகனச் சந்தையாக உள்ளது. 2020-ம் ஆண்டில் 4-வது இடத்திற்கு முன்னேறும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் முக்கிய நிறுவனங்களின் கார்கள் விபத்து பாதுகாப்பு சோதனையில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

No comments: