Wednesday, May 25, 2016

‎வாலாந்தூர்_உழவன்_மகன்‬!!!


’பூவனம்’ திரைப்படத் தயாரிப்பாளர் சுப்பையாவுக்கு துபாய் நாட்டில் உள்ள ‘ஈரோப்பியன் கான்டினென்டல் பல்கலைக் கழகம்’ டாக்டர் பட்டம் வழங்...கி கவுரவித்துள்ளது.

படவுலகில் படத் தயாரிப்பாளராக, நடிகராக இப்போது காலடி எடுத்து வைத்திருப்பவர் என். சுப்பையா. இவர் ‘பூவனம்’ என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இப்படம் தமிழ், மலையாளம் இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர, வேறு இரண்டு புதிய படங்களையும் இவர் தயாரிக்கிறார். அவற்றில் ஒரு படம் முடிவடையும் நிலையில் உள்ளது. இன்னொரு படம் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது. இரண்டு படங்களிலும் பிரபல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
‘பூவனம்’ படத்தைத் தயாரிக்கும் சுப்பையா அதில் படம் முழுக்க எஸ்டேட் உரிமையாளராக வருகிறார். தான் தயாரிக்கும் மற்ற படங்களிலும் இவர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார். ‘மதுரை மீனாட்சி என்.சி.எஸ். பிரசென்ட்ஸ்’ என்பது இவரின் பட நிறுவனத்தின் பெயர்.

உசிலம்பட்டி வட்டார செய்திகள்'s photo.

அடிப்படையில் இவர் ஒரு விவசாயி, மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுக்காவில் உள்ள வாலாந்தூர் இவரின் சொந்த ஊர். இவரின் தாத்தா முத்துச்சாமி தேவர், தந்தை நல்லிவீரத் தேவர், தாயார் சின்னம்மா அனைவரும் விவசாயிகள். தன் தாத்தா, தந்தை வழியில் தீவிரமான விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் சுப்பையா தன்னை ‘வாலாந்தூர் உழவன் மகன்’ என்று பெருமையாக கூறிக் கொள்கிறார். அங்கு இவர் நெல், கரும்பு, வாழை, பருத்தி ஆகியவற்றை விவசாயம் செய்கிறார்.
‘உழவன் மகன்’ சுப்பையாவிற்கு கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ‘ராஜகுமாரி’ என்ற கிராமத்திலும் நிலம் இருக்கிறது. அங்கு ஏலம், மிளகு, காபி, ஜாதிக்காய், வாழை ஆகியவற்றை விவசாயம் செய்கிறார்.
இவை தவிர, பொதுப் பணித் துறையின் கான்ட்ராக்டராகவும் இவர் செயல்பட்டிருக்கிறார். சாலை, நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில் இவர் பல வருடங்கள் கான்ட்ராக்ட் ஒப்பந்தம் எடுத்து தன் பங்களிப்பை நன்கு ஆற்றியிருக்கிறார்.

மதுரையில் இவருக்கு சொந்தத்தில் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் இருக்கிறது.
விவசாயம், தொழில் துறை, கலையுலகம் ஆகியவற்றில் ஆழமாக கால் பதித்து செயல்பட்டுக் கொண்டிருக்கும் ‘உழவன் மகன்’ சுப்பையாவிற்கு துபாயில் உள்ள ‘ஈரோப்பியன் கான்டினென்டல் பல்கலைக் கழகம்’ (European Continental University) சமீபத்தில் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்திருக்கிறது. அதற்காக துபாயில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு சுப்பையா டாக்டர் பட்டத்துடன் திரும்பி வந்திருக்கிறார்.

‘வாலாந்தூர் உழவன் மகன் சுப்பையா நல்லித் தேவர்’ என்ற பெயரில்தான் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கிறது.
படத்துறையில் தயாரிப்பாளராக பவனி வந்து கொண்டிருக்கும் சாதனைகள் புரிந்து கொண்டிருக்கும் ஒரு விவசாயிக்கு டாக்டர் பட்டம் கிடைத்திருப்பது என்பது அனைவரும் சந்தோஷப்படக் கூடிய ஒரு விஷயம்தானே!

2 comments:

English BT said...

[8:12AM, 5/26/2016] A Athan Airtel: பொறுத்தது போதும்..!

பொங்கி எழு தலைவா..!

குனிந்தது போதும்..!

நிமிர்ந்திடு தலைவா.. தமிழகம் திரும்பிடும் உன்னை நோக்கி..! தமிழகத்தை காக்க தமிழக முதல்வராக மீண்டும் வா..!

என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன..



கடந்த இரண்டு நாட்களாக #OPS4CM என்ற ஹேஷ்டேக்  மூலம் சமூக வளைதளங்களில் ஒ.பி.எஸ் மீண்டும் முதல்வராக வேண்டுமமென்ற பதிவுகள் அதிகமாக பரவி வருகின்றது..



ஒ.பி.எஸ் அதிமுக வில் ஓரங்கட்டபடுகிறார் என்ற செய்தி ஒருபுறம் இருந்தாலும், இவை அனைத்தும் திமுக வினரால் திட்டமிட்டு பரப்பபடும் வதந்தி என்று கூறுகின்றனர் அதிமுக வினர்
[8:15AM, 5/26/2016] A Athan Airtel: இரண்டாக உடைகிறதா அதிமுக ? உதயமாகுமா ஒ.பி.எஸ் தலமையிலான அதிமுக.!
முருகேசன் மா 04/03/2016 01:20 PM


தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேலையில் தற்போதைய ஆளும் கட்சியான அதிமுக வில் நிகழ்ந்து வரும் அதிரடி மாற்றங்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

கடந்த ஒரு மாத காலமாக அதிமுக வில் கட்சி பதவியில் இருந்த பலரை அதிரடியாக மாற்றம் செய்து வருகின்றார் அக்கட்சியின் பொதுசெயளாலர் ஜெயலலிதா. ஆட்சியேற்ற சிறிது காலத்திலிருந்தே அமைச்சரவையிலும் அவ்வப்போது மாற்றம் செய்துகொண்டே வந்துள்ளார் ஜெயலலிதா.

தற்போது சில நாட்கள் இடைவெளிகளில் இரண்டு அமைச்சர்களின் பதவியை பறித்த ஜெயலலிதா அவர்கள் கவனித்து வந்த துறையை மற்ற அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கியுள்ளார்.

அமைச்சரவை மாற்றம் இந்த ஆட்சியில் தொடர்கதையாக இருந்து வருவதால் தற்போது நடந்த அமைச்சர் பதவி பறிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரிதாக எந்த தாக்கத்தையும்  ஏற்படுத்தவில்லையென்றாலும், கட்சி பொறுப்பாளர்களை பதவியில் இருந்து நீக்கியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆதரவாளர்கள் நீக்கம் :

அதிமுக வை பொறுத்தவரையில் விசுவாசத்தின் மறுபெயர் தமிழக முன்னாள் முதல்வர் ஒ.பண்னீர்செல்வம் என்கின்ற நிலைதான் இதுவரை இருந்து வந்துள்ளது. அவருடைய அத்தகைய பணிவே அவருக்கு இரண்டு முறை தமிழக முதல்வராகும் வாய்ப்பையும் பெற்று தந்துள்ளது. இந்நிலையில் ஒ.பண்னீர்செல்வம் ஆதரவாளர்களை கட்சி பொறுப்புகளில் இருந்து கூண்டோடு நீக்கியது அரசியல் வட்டாரத்திலும், அதிமுக கட்சி வட்டாரத்திலும் பரபரப்பை உண்டாக்கியது. தற்போது வரை அதிமுக வில் பதவியில் இருப்பவர்கள் அனைவரும் தங்கள் பதவி எப்போது பறிபோகுமோ என்கின்ற பீதியில் உள்ளனர்.



ஒ.பி.எஸ் ஆதராவளர்கள் நீக்கத்திற்கு பின்னர் ஒ.பி.எஸ் அதிமுக விலிருந்து ஓரங்கட்டபடுவதாக பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன. எம்.ஜி.ஆர் அதிமுக என்கின்ற பெயரில்  ஒரு பேனர் சமூக வளைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது, .......whatsapp il paravi varum indha unmaiya venkat

English BT said...

Whatsapp il paravi varum indha news unmaiya mr.venkat