Saturday, May 2, 2009

விருதுநகர் தேர்தல் பிரசாரத்தின்போது நடிகர் கார்த்திக் மீது செங்கல் வீச்சு மயிரிழையில் உயிர் தப்பினார்

விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சி சார்பில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி நிறுவன தலைவர் நடிகர் கார்த்திக் போட்டியிடுகிறார். இதற்காக விருதுநகர் தொகுதியில் கிராமம் கிராமமாக சென்று கார்த்திக் பிரசாரம் செய்து வருகிறார். தன்னை எம்.பி.யாக தேர்ந்தெடுத்தால் வறண்டபூமியான விருது நகரை வளமான தொகு தியாக மாற்றுவேன். மற்ற அரசியல் வாதிபோல் அல்லாமல் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து சேவை செய்வேன். மேலும் தொகுதியை மேம்படுத்த பல திட்டங்கள் வகுத்துள் ளேன். எனவே எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். என்றுகூறி பிரசாரம் செய்து வருகிறார்.
நடிகர் கார்த்திக் பிரசாரம் செய்யும் இடமெல்லாம் கட்சி தொண்டர்களும் மற்றும் கூட்டணி கட்சிகளான பாரதீய ஜனதா, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சி நிர்வாகிகள், தொண்டர்களும், பொது மக்களும் திரண்டு வந்து சிறப்பான வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.
நேற்று மாலை விருது நகர் தொகுதியான மெட்டு குண்டு, சென்னல் குடி, அர்சனாபுரம், பசும்பொன் நகர், கூத்திபாறை, மன்னார்கோட்டை, ஆர்.ஆர். நகர், சத்திரரெட்டியபட்டி உள்பட பல கிராமங்களுக்கு சென்று திறந்த வேனில் பிரசாரம் செய்தார். சென்னல்குடியில் பிரசாரம் செய்து கொண்டு இருந்தபோது ஊர் பொது மக்கள் திரண்டு வந்தனர். இந்த பகுதிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க தாமரை சின்னத்தில் வாக்களிக்க கேட்டுக் கொள்கிறேன், என்று பேசி கொண்டிருந்தபோது ஒரு மர்ம ஆசாமி பெரிய செங்கல்லை தூக்கி அவரை நோக்கி வீசினான். செங்கல் வருவதை அறிந்த அவர் குனிந்து கொண்டார். இதனால் அவர் மயிரிழையில் உயிர் தப்பினார்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகி களும், தொண்டர்களும் செங்கல்வீசிய மர்ம ஆசாமியை பிடிக்க தேடினர். தொண்டர்களின் ஆவேசத்தை கண்ட மர்ம ஆசாமி தலைதெரிக்க தப்பி ஓட முயன்றான். ஆனாலும் அவனை தொண்டர்கள் விடாமல் விரட்டி பிடித்து பாது காப்பிற்கு நின்று கொண் டிருந்த போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவனிடம் போலீசார் விசாரித்தபோது அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் செந்தில் (வயது 25) என தெரியவந்தது. அவனிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகி றார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments: