Wednesday, May 6, 2009

விருதுநகரில் கார்த்திக், சரத்குமார் பிரசாரம்

மே 05,2009,22:11 IST


விருதுநகர் : விருதுநகர் தொகுதியில் நா.ம.க., கட்சி சார்பாக போட்டியிடும் கார்த்திக், ச.ம.க., தலைவர் சரத்குமார் விருதுநகரில் உள்ள பாண்டியன் நகர், ராமமூர்த்தி ரோடு, அல்லம் பட்டி, பஜார், பொட்டல் , மதுரை ரோடுபகுதிகளில் பிரசாரம் செய்தனர்.

அப்போது கார்த்திக் பேசுகையில், 'தேர்தலில் எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். நான் வெற்றி பெற்றால் விருதுநகருக்கு தரமான ரோடு வசதி, வெகு நாட்களாக தீர்க்கப்படாத குடிநீர் பிரச்னை, எல்லோருக்கும் வேலை வாய்ப்பு, உலகத்தரமான சுகாதாரம் செய்து கொடுப் பேன். தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற்றுத்தருவேன். இதுவரை தேர்ந்தெடுத்தவர்கள் உங்களுக்கு ஒன்றும் செய்யாமல் கை விட்டு விட்டார்கள். இந்த முறை நீங்கள் அவர்களை கைவிடுங்கள். ஒரு முறை எனக்கு வாய்ப்பளியுங்கள்' இவ்வாறு கார்த்திக் பேசினார்.

ச.ம.க., தலைவர் சரத்குமார் பேசியதாவது:விருதுநகரில் பா.ஜ., கூட்டணி கட்சியில் உள்ள நாடாளும் மக்கள் கட்சி வேட்பாளர் கார்த்திக் போட்டியிடுகிறார். விருதுநகரில் போட்டியிடும் அவர் பல்வேறு மொழி பேச கூடிய படித்த வேட்பாளர். அவரை வெற்றி பெறச்செய்தால் விருதுநகரை சிங்கப்பூர், அமெரிக்காவைப் போல் மாற்றிக்காட்டுவோம் என்றார்.


No comments: