விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி நிறுவன தலைவரும், நடிகருமான கார்த்திக் தொகுதி முழுவதும் சூறா வளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல்பிரசாரம் செய்து வருகிறார். தாமரை சின்னத்தில் போட்டியிடும் அவர் தாமரை சின்னத்தை காண்பித்து நேற்று முன் தினம் திறந்த வேனில் சென்னல்குடி கிராமத்தில் பிரசாரம் செய்து கொண்டு இருந்தபோது அவர் மீது கல்வீசி தாக்கப்பட்டது. குனிந்து கொண்டதால் மயிரிழையில் அவர் உயிர் தப்பினார்.
இது குறித்து நடிகர் கார்த்திக் மதுரையில் நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் சிவகாசி அருகே உள்ள சென்னல்குடி, பந்தல்குடி பகுதியில் டெம்போ வேனில் நின்ற படி பிரசாரம் செய்து வாக்காளர்களிடம் ஓட்டு கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது என்னை நோக்கி கூட்டத்தில் இருந்து கல் வீசப்பட்டது. அந்த கல் டெம்போ வேனில் விழுந் தது. கல்வீசி தாக்கி எனது பிரசாரத்தை தடுக்க நினைக்கிறார்கள். நான் யாரையும் எதிரியாக நினைக்கவில்லை. ஆனால் என்னை சிலர் எதிரியாக நினைப்பது வேடிக்கையாக உள்ளது.
எனது வெற்றி என்பது உறுதியாகிவிட்டது. எனவே தோல்வி பயத்தால் கல்வீசி தாக்குவது ஜனநாயக படுகொலை ஆகும். போலீ சார் தங்களது கடமைகளை செய்வார்கள். நான் சட்டத்தை மதிக்க கூடியவன். எனக்கு கூடுதல் பாதுகாப்பு தேவை. இதை நான் பயந்து போய் கேட்கவில்லை. எனது பயணம் பாதியில் நின்று விடக்கூடாது. மக்க ளுக்கு சேவை செய்கிற எனது பயணம் தொடர வேண்டும். மக்களின் எதிர் பார்ப்பு நிறைவேற வேண் டும் என்பதற்காகத்தான் கூடுதல் பாதுகாப்பு கேட்கிறேன்.
நான் வெற்றி பெற்றால் இந்தியாவிலேயே விருதுநகர் பாராளுமன்ற தொகுதியை சிறந்த தொகுதியாக உரு வாக்குவேன்.
தேர்தலில் போட்டி இருக்கலாம். பொறாமை இருக்க கூடாது. பொறாமை பகை ஆகிவிடும். பகை நாளை என்னவாகும்? என்று நான் சொல்ல தேவை இல்லை. வருகிற 5-ந்தேதி சிவகாசியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடக்கிறது.
இதில் சுப்பிரமணியசாமி, திருநாவுக்கரசர் ஆகியோர் என்னை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளனர். நற்பணி மன்றம்மூலம் சேவை செய்ய நினைத்தேன். அதை தடுத்தார்கள். நாட்டை மக்கள் ஆள வேண்டும் என்பதற்காக கட்சி தொடங்கி மக்களுக்காக சேவை செய்ய வந்துள்ளேன். இப்போதும் விரட்டப் பார்க்கிறார்கள். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். எனது வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது திராவிட விழிப்புணர்ச்சிக் கழக தலைவர் பி.டி.குமார், நிர்வாகிகள் டிராவல்ஸ் முத்துச்சாமி, தென்னவன் ஆகியோர் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment