Monday, September 3, 2012

10 ஆண்டுகளாக சிறையில் வாடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு சீமான் கோரிக்கை

நாம் தமிழர் கட்சி சார்பில், ஆயிரம் விளக்கில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் நடந்தது. 10 ஆண்டுகளை கடந்த அரசியல் சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடந்த இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பேசியதாவது: 

தண்டணைக் காலம் முடிந்த பின்னால் கடந்த 10 ஆண்டுகளாக சிறைகளில் வாடும் அரசியல் கைதிகளை பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் தமிழக அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும். சிறையில் இல்லாதவர்கள் எல்லாம் குற்றவாளிகள் அல்ல .கடந்த ஆட்சி காலத்தில் 1 1/2 ஆண்டில் 5 முறை சிறை சென்றவன் நான், நீண்ட காலமாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் 54 இஸ்லாமிய தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். 

ரூ 1 இலட்சத்து 70 ஆயிரம் கோடியை கொள்ளையடித்தவர்கள் வெளியில் இருக்கிறார்கள். புதுச்சேரி காங்கிரசார், என்னை இங்கு நுழைய விடமாட்டோம் என்றும் புதுச்சேரி வந்து பேசக்கூடாது என்றும் கூறுகிறார்கள். முதலில் காங்கிரஸ்காரர்கள் பாராளுமன்றத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவதாக என்மீது குற்றம் சாட்டுகின்றனர். இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும் தமிழர்களை பயங்கரவாதிகளாகவும் நினைக்கிறார்கள், இது மாறவேண்டும் 

இவ்வாறு சீமான் பேசினார். 

கூட்டத்தில் கலைக்கோட்டு உதயம், வக்கீல்கள் தடா சந்திரசேகர், அறிவுச்செல்வன், அன்பு தென்னரசன், ஆவின் கணேசன், அமுதா நம்பி, தங்கராசு, பெரியார் அன்பன் காஞ்சிராசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments: