Thursday, September 19, 2013

ராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி சாலை மறியல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி, அகி ல இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர், கமுதியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியிலில் ஈடுபட்டனர். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் சாதி தலைவர்களின் நிகழ்ச்சியை முன்னிட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி செப். 14-ஆம் தேதி, முதுகுளத்தூர் அருகே கீழத்தூவலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, தடை உத்தரவை மீறிச் செல்ல முயன்றதாக அ.இ.பார்வர்டு பிளாக் தொழிற்சங்க மாநிலச் செயலர் ஆனந்த முருகன் உள்பட 13 பேரை கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் வி. விக்ரமன் கைது செய்தார். இச்சம்பவத்தில் 3 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்டத்தில் அக். 31 வரை அமலில் உள்ள 144 த டை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அ.இ.பா. பிளாக் தொழிற்சங்க செயலர் ஆனந்த முருகன் தலைமையில் அக்கட்சியினர், கமுதி பஸ் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த உதவி காவல் கண்காணிப்பாளர் விக்ரமன், காவல் ஆய்வாளர் ஆனந்தன், சார்பு ஆய்வாளர்கள் ஜான்சி ராணி, அப்துல்லா உள்ளிட்ட போலீஸார், மறியலில் ஈடுபட்ட ஆனந்த முருகன் உள்ளிட்ட 46 பேரை கைது செய்தனர். .

No comments: