Thursday, September 19, 2013

கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள தேவர் ஜயந்தி விழாவிற்கான கட்டுப்பாடுகளை தளர்த்த வலியுறுத்தி தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் அரசகுமார் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் மனு அளித்தார். மனு விவரம்: தேவர் ஜயந்தி விழாவிற்கு லட்சக்கணக்கானோர் ஆண்டு தோறும் வருகிறோம். இளைஞர்கள் ஜோதி எடுத்துவருவதும் பெண்கள் கமுதியிலிருந்து முளைப்பாரி எடுத்து வருவதும் பசும்பொன்னை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பால்குடம் எடுத்து வந்து வணங்கிவருவதும் வழக்கமான நடைமுறை. வாடகை வாகனங்களில் வரக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் விமானம் மூலம் வரும் பக்தர்கள் எவ்வாறு வந்து செல்ல இயலும். கூலி தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து வாடகை வாகனங்களில் தான் வருவது வழக்கம். தங்களின் உத்தரவினால் ஏழை எளியவர்கள் வர முடியாத சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எனவே கடும் கட்டுப்பாடுகளை தளர்த்தி தேவர் ஜெயந்தி விழாவை எப்போதும் போல் சிறப்பாக நடப்பதற்கு ஏற்பாடு செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இதில் மாநில தலைவர் தேவர், மாநில பொதுச்செயலாளர் முருகன்ஜி,மாநில பொருளாளர் முத்தையா பசும்பொன், ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கார்த்திகன், மாவட்ட செயலாளர் பூமிதேவர், நகர் செயலாளர் செல்வராஜ், மதுரை தென்மண்டலச் செயலாளர் ஞானசேகரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments: