Thursday, February 26, 2015

உசிலம்பட்டி கூட்டுறவு நகர வங்கி


உசிலம்பட்டி கூட்டுறவு நகர வங்கியின் நவீனமயமாக்கப்பட்ட கட்டிடம் திறப்பு விழா உசிலம்பட்டி நகர கூட்டுறவு வங்கி முழுவதும் குளிரூட்டப்பட்டு நவீனமுறையில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் திறப்பு விழா வங்கியின் தலைவர் முருகன்ஜி தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் சிவமணி, நிர்வாக குழு உறுப்பினர்கள் பாண்டியம்மாள், தீபா, பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வங்கி மேலாண்மை இயக்குனர் வீரபாண்டியன் வரவேற்றார். உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கட்டிடத்தை திறந்து வைத்தார். இதில் வங்கி நிர்வாகக்குழு உறுப்பினர்கள் முருகன், மாயச்சரவணன், அர்ச்சுனன், பொன்பாண்டியம்மாள், பிளாவடியான், பாலாஜி, வங்கி சட்ட ஆலோசகர் ராஜா, வங்கிப்பொறியாளர் இளங்கோவன் மற்றும் பணியாளர்கள், வங்கி உறுப்பினர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் வங்கி பொதுமேலாளர் கருணையானந்தம் நன்றி கூறினார்.

No comments: