நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
சட்டக்கல்லூரி மாணவர்களின் போராட்டங்களைக் குலைக்கும் விதமாகத் தடியடி நடத்தி கைது நடவடிக்கைகளை காட்டியிருப்பது மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.
நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். நூற்றாண்டு கடந்து நிற்கும் சட்டக் கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்ற நினைப்பது மாணவர்கள் மத்தியில் மீண்டும் போராட்ட எண்ணங்களையே உருவாக்கும். இதனைப் புரிந்துகொண்டு இந்தப் பிரச்சினையில் நியாயமான தீர்வை அரசுத் தரப்பு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment