Friday, October 2, 2015

‘கள்ளன்’ ஆனார் கரு.பழனியப்பன்!

‘மந்திரப் புன்னகை’ படத்தைத் தொடர்ந்து சிறிய இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் கரு.பழனியப்பம் ஹீரோவாக நடிக்க இருக்கும் படம் ‘கள்ளன்’.
தேனி, கம்பம், தென் கேரளப் பகுதிகளில் தொடர்ச்சியாக 55 நாட்கள் படப்பிடிப்பு நடபெற இருக்கும் இப்படத்தை பெண் இயக்குநர் சந்திரா இயக்குகிறார்.
இயக்குநர் அமீரின் ‘ராம், பருத்தி வீரன்’, இயக்குநர் ராமின் ‘கற்றது தமிழ்’ என தமிழ்சினிமாவுக்கு நம்பிக்கைத் தந்த படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிற சந்திரா ‘கள்ளன்’ படத்திற்காகத் தேர்ந்தெடுத்து இருக்கிற கதைக்களம் இப்பொழுதே கோடம்பாக்கத்தில் அனைவரின் புருவங்களையும் உயர வைத்துள்ளது.
விவசாய சமூகம் உருவாவதற்கு முன்பு வாழ்ந்த வேட்டை சமூகம் இன்றைக்கு இல்லை! அவர்கள் என்ன ஆனார்கள்? என்பதை நிஜத்துக்கு மிக நெருக்கமாக நின்று சொல்லும் படம் இது என்று ட்விட்ஸ்ட் வைக்கிறார் இயக்குநர் சந்திரா.
பெண் இயக்குநர் என்றாலே காதல், குடும்பம் தாண்டிய கதைகளை கையாள்வது இல்லை என்கிற லேபிளையும் கிழித்தெரிகிறார்.
எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்ய, நா.முத்துக்குமார் பாடல்களுக்கு கே இசையமைக்கிறார். தொடர்ந்து இதர ஒவ்வொரு துறைக்கும் பார்த்து பார்த்து தொழில்நுட்பக் கலைஞர்களை தேர்ந்தெடுத்து அழகு சேர்த்துக் கொண்டிருக்கும் சந்திராவின் இப்படத்தை எட்செட்ரா என்டர்டைன்மென்ட் சார்பாக வி.மதியழகன் மற்றும் ஆர்.ரம்யா இருவரும் தயாரிக்கிறார்கள்.

No comments: