Friday, February 1, 2013

VISWAROOPAM

சினிமா தொழில் நேர்மையை மட்டும் கற்றிருக்கிறேன்: நடிகர் கமலஹாசன் உருக்கம்

நடிகர் கமலஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது பழைய வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- 

இது நான் சிறுவயதில் இருந்து ஓடி விளையாடி வளர்ந்த வீடு இது. இங்கு இருந்து பத்திரிகையாளர்களை சந்திக்கிறேன். இது எனது சொந்த வீடு. இதில் எனது சகோதரர்களுக்கும் உரிமை உண்டு. அவர்களிடம் இருந்து நான் விலைக்கு வாங்கி விட்டேன். நான் கொடுத்த பணத்தை என் தந்தை எல்லா சகோதரர்களுக்கும் பிரித்து கொடுத்து விட்டார். 

நான் எடுக்கும் படத்தில் எனது சகோதரர் சந்திரஹாசன் பங்குதாரர் என்று வரும். அவர் சம்பளமாக பணம் எதுவும் வாங்கியது இல்லை. சிறுவயதில் இருந்து இன்று வரை என்னை தன் பொறுப்பில் வளர்த்து வருகிறார். தற்போது என்ன நடக்கிறது என்று எனக்கு தெரிய வில்லை. அது தெரிந்தால் நான் அரசியல் வாதியாகி விடுவேன் என்ற பயம் இருக்கிறது. 

இன்று காலை படம் வெளிவரும் என்று எதிர்பார்த்தேன். தியேட்டர்களில் எனது ரசிகர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். என் ரசிகர்களில் இஸ்லாமியரும் இருக்கிறார்கள். சினிமாதான் என் தொழில். நான் நேர்மையை மட்டுமே கற்று இருக்கிறேன். இந்த படத்தில் நிறைய முதலீடு செய்து இருக்கிறேன். ரசிகர்களின் திறமையையும், நம்பி படத்திற்கு முதலீடு செய்து இருக்கிறேன். இருக்கிற சொத்துக்களை விட அதிகம் கடன் வாங்கி முதலீடு செய்து இருக்கிறேன். 

ரசிகர்கள் மீதும் படத்தின் மீதும் இருக்கும் நம்பிக்கையில் சொத்துக்களை வைத்து விளையாடி இருக்கிறேன். சரியான நேரத்தில் பணத்தை கட்டவில்லை என்றால் சொத்துக்களை தனதாக்கி கொள்ளலாம் என பணம் கொடுத்தவருக்கு எழுதி கொடுத்துள்ளேன். இதுபோல் பல இடை யூறுகளை சந்தித்து உள்ளேன். ராஜபார்வை படத்தில் நிறைய இழந்தேன். அதில் இருந்து மீள 7, 8 வருடங்கள் வேலை செய்ய வேண்டி இருக்கிறது. 

1986-ல் மறுபடியும் பூஜ்ஜியம் நிலைக்கு தள்ளப்பட்டேன். அதில் இருந்து மீண்டு இப்போது ரூ.100 கோடி செலவில் படத்தை எடுத்துள்ளேன். அதற்கும் நிறைய தடங்கல்கள். தமிழகத்தில் நான் இருக்க வேண்டியது இல்லை என்று நினைக்கிறார்களோ என தெரியவில்லை. எனக்கு சிறு ஆசை வந்துள்ளது. மதசார்பற்ற மாநிலத்தில் குடியேற விரும்புகிறேன். காஷ்மீரில் இருந்து கேரளா வரை மதசார்பற்ற இடம் கிடைக்குமா என்று தேடுவேன். இங்கு கிடைக்கா விட்டால் வேறு நாடுதான். கோபத்தில் இதை நான் சொல்லவில்லை. புண்பட்டது போதும், உனக்கு தமிழர்களை பிடிக்கவில்லையா என்று கேட்கலாம். தமிழர்கள் என் உயிர். 

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்று என் உடலையும், மக்களுக்குத்தான் கொடுத்து இருக்கிறேன். நடந்துள்ள சம்பவங்கள் என் மனதை உருக்கிவிட்டன. என் சொத்துக்களை எடுத்தால்தான் தேசத்துக்கு ஒற்றுமை கிடைக்கும் என்றால் தாராளமாக எடுத்துக் கொள்ளுங்கள். நான் குழந்தையாக நடிகையர் திலகம் (சாவித்திரி) கையில் இருந்தவன். ஜெமினி கணேசன் கையைப் பிடித்து நடை பயின்றவன். நடிகர் திலகத்தின் மடியில் அமர்ந்தவன். எம்.ஜி.ஆரின் தோளில் ஏறி அமர்ந்தவன். அப்படி வளர்ந்த பிள்ளை நான். எனக்கு பயம் இல்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.

ADMK AGAINST KAMAL ?

“விஸ்வரூபம்” திரைப்படம் தமிழகத்தில் ஜனவரி 25ஆம் தேதியன்று வெளியிடப்படுவதாக இருந்தது. இந்தத் திரைப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக ஒரு புகார் எழுந்தது. இதையடுத்து ஒரு இஸ்லாமிய அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், தமிழக அரசு “விஸ்வரூபம்” திரைப்படத்தை தமிழகத்திலே வெளியிட தடை பிறப்பித்தது. தடை உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் படத்தைத் தயாரித்த ராஜ்கமல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணைதான் ஆறு மணி நேரம் நடைபெற்றுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினி விடுத்த அறிக்கையிலும், இஸ்லாமியர்களுக்கு வேண்டுகோள் விடுத்து, இந்தத் திரைப்படத்தை வெளியிட உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க. தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல்.திருமாவளவன், திரைப்பட இயக்குநர்கள் பாரதிராஜா, பார்த்திபன், அமீர் போன்றவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு அரசு விதித்துள்ள தடையை நீக்க வேண்டுமென்று அறிக்கைகள் வாயிலாகக் கேட்டுக் கொண்டனர்.

மேலும் அவர்கள் அறிக்கையில் கமல் எப்படிப்பட்டவர் என்பதையும், யாருடைய மனதையும் புண்படுத்தும்படியாக நடந்து கொள்ளாதவர் என்பதையும் எடுத்து எழுதினார்கள். நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் சுமூகமான தீர்வு ஏற்படுத்த முதலமைச்சர் கமலஹாசனை அழைத்துப் பேசவேண்டுமென்று அறிக்கை விட்டிருந்தார். இவ்வளவிற்கும் மேலாக, கமல் விடுத்த அறிக்கையில், தான் இஸ்லாமியர்களுக்கு எதிரானவன் அல்ல என்றும், இந்தப் படமும் முஸ்லீம்களுக்கு எதிரானது அல்ல என்றும், முஸ்லீம்கள் தனக்கு சகோதரர்கள் என்றும் தெரிவித்திருந்தார். ஆனாலும் தமிழக அரசு தான் விதித்த தடையைத் திரும்பப் பெற முன்வரவில்லை.

தமிழக அரசு இந்த அளவிற்குக் கடுமையாக இந்தத் திரைப்படத்திற்கு தடை விதிப்பதற்கு என்ன காரணமோ தெரியவில்லை. ஆனால் ஒரு சாரார், இந்தத் திரைப்படத்தை அ.தி.மு.க.விற்கு மிகவும் வேண்டிய ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அடிமாட்டு விலைக்கு வாங்க முயன்றதாகவும், ஆனால் படத்தைத் தயாரித்தவர்கள் தாங்கள் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து இந்தத் திரைப்படத்தைத் தயாரித்துள்ள நிலையில் குறைந்த விலைக்கு விற்க மறுத்து விட்டு, அதிக விலைக்கு வேறொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கு விற்று விட்டதுதான் காரணம் என்றும் சொல்கிறார்கள். 

அதைப் போலவே, மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தைப் பற்றிய நூல் வெளியீட்டு விழாவில் கமல் பேசும்போது, “வேட்டிக் கட்டிய ஒரு தமிழன், பிரதமராக வரவேண்டும்” என்று ப.சிதம்பரத்தைக் குறிப்பிட்டுப் பேசியதும் கோபத்திற்கு ஒரு காரணம் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்தக் கருத்துக்கள் எல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று நமக்குத் தெரியவில்லை.

இந்த வழக்கினை விசாரிக்கும் உயர்நீதி மன்ற நீதிபதியே, இந்தப் படத்தினை சிறப்புக் காட்சியின் மூலமாக நேரிலே பார்த்தார். அதன் பிறகு 28ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, உயர்நீதி மன்ற நீதிபதியே, இரு தரப்பினரும் கலந்து பேசி ஒரு நல்ல முடிவினைக் காணலாம் என்று தெரிவித்தார். ஆனால் தமிழக அரசு அதற்கான முயற்சியிலும் ஈடுபடவில்லை.

விக்ரம் படம் தொடர்பாக எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியதற்கு ஆதாரம் உள்ளது: கருணாநிதி

தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

31-1-2013 தேதிய முரசொலி நாளிதழில் நான் எழுதிய கடிதத்தில், கமல் ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சி ஒன்றில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். கலந்துகொண்டபோது, ஜெயலலிதா, எம்.ஜி.ஆருக்கு தன் கைப்பட எழுதிய கடிதத்தில் கமல்ஹாசனைப் பற்றி ஒருமையில் கண்டனம் செய்து குறிப்பிட்டு தெரிவித்த சில வாசகங்களை எழுதியிருந்தேன்.

அப்படி நான் எழுதியது கற்பனையான குற்றச்சாட்டு எனவும், தான் தினமும் எம்.ஜி.ஆருடன் பேசுவதற்கான வாய்ப்பு அப்போது இருந்ததால், எதற்காக கடிதம் எழுத வேண்டும் என்றும், அதற்காக என் மீது வழக்கு தொடரப் போவதாகவும் ஜெயலலிதா தெரிவித்திருக்கிறார்.

நான் எழுதியதற்கு போதுமான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. முதல் அமைச்சர் என் மீது வழக்கு போடும்போது, நீதிமன்றத்தில் ஆதாரத்தைக் காட்ட நான் தயாராக இருக்கிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.  


Mukkulathors Should Support Kamal Hassan


Mukkulathors Should Support Kamal Hassan

Kamal's latest venture Viswaroopam has been banned by the AIADMK led government of Tamil Nadu.This is the same man who gave us Thevar Magan in 1992. 

I humbly request my Mukkulathor brothers and sisters in Tamil Nadu especially members of AIADMK to pressure its leadership to withdraw the ban on Viswaroopam. Let us not forget Kamal's contribution to country and people.

-- 
Regards,

SHARMALAN THEVAR

APS.THEVAR :

MY NOTE FOR MY RELATIVES AND FRIENDS: FOR KAMALJI, PLEASE WATCH MOVIE IN THEATRES NOT IN PIRATED ONES.





No comments: