Monday, May 19, 2014

தேவரின பாதுகாப்பு பேரவை


15.5.2014 மேலூர் தலைமை அலுவலகத்தில் தேவரின பாதுகாப்பு பேரவை மாநில செயற்குழு கூட்டம் தலைவர் கம்பூர் சேகர் தலைமையில் நடைபெற்றது பொதுச்செயலாளர் சிவ.கலைமணி அனைவரையும் வரவேற்றார் மற்றும் பொருளாளர் அருண்மொழிதேவன் துணை தலைவர் கவட்டயம்பட்டி முருகேசன் மாநில செயலாளர் கதி.ராஜ்குமார் இளைஞரணிச்செயலாளர் மாணிக்கம் மற்றும் ஒன்றிய மாவட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர் சிறப்பு அழைப்பாளர்களாக கள்ளந்திரி லட்சுமி நாராயணன் துரைகண்ணன் ஆகியோர் பங்கேற்றனர் கூட்டத்தில் மதுரை மாநகர் ,மதுரை கிழக்கு மதுரை மேற்கு விருதுநகர் தேனி புதுக்கோட்டை சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்குபுதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர். முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, 1.தென்மாவட்ட மக்களின் வாழ்வாதார பிரச்சினையான முல்லைப்பெரியாறு வழக்கை உச்சநீதிமன்றத்தில் திறம்பட நடத்தி 142 அடியாக உயர்த்த பாடுபட்டு அதில் வெற்றிகண்டதமிழக முதல்வர் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியும் பாராட்டையும் தெரிவித்து கொள்ளுகிறது. 2.தமிழகத்தின் கலாச்சார பண்பாடு வாழ்வியலோடு இரண்டற கலந்த பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிகட்டை தமிழகத்தில் மீண்டும் நடத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தமிழக முதல்வரை இக்கூட்டம் வலியுறுத்துகிறது . 3.காவேரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழித்து வறட்சி மாவட்டமாக மாற்றும் திட்டமான மீத்தேன் திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற முனைந்தால் தென்மாவட்ட மக்களை திரட்டி அத்திட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டத்தை முன்னெடுப்பது என இக்கூட்டம் முடிவு செய்கிறது. 4.கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருந்து தொண்டிவரை பரவி வாழ்கின்ற நம்மின மக்களை ஒருங்கிணைப்பது என இக்கூட்டம் முடிவு செய்கின்றது . 5.வருகின்ற வைகாசி 27 (ஜூன் 10 )ம் தேதி சிவகங்கை சீமை கத்தப்பட்டில் சுதந்திரபோராட்ட வீரர் தென்பாண்டி சிங்கம் வாளுக்குவேலி அம்பலகாரர் வீரவணக்க நாள் விழாவினை சிறப்பாக நடத்திடுவது என ஏகமனதாக தீர்மானிக்கப்படுகிறது . 6.நம் இன மக்கள் பரவி வாழுகின்ற அனைத்து கிராமங்களிலும் தேவரின பாதுகாப்பு பேரவை இயக்கத்தை வலுவாக கட்டமைப்பது என தீர்மானிக்கப்படுகிறது.

No comments: