ராயல் மூன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எம்.ஏ.ஹபீப் தயாரிக்க ,
‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘தொட்டால் தொடரும்’ ஆகியப் படங்களில் நடித்துள்ள
தமன் ஹீரோவாக நடிக்க, ‘காடு’ படத்தில் நடித்த சம்ஸ்கிருதி கதாநாயகியாக
நடிக்க ‘அய்யன்’ படத்தை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி, கதை,
திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இரண்டாவது படம் ‘சேது பூமி’ .
படம் குறித்து கூறிய இயக்குனர் ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி, “சேது மன்னர்கள் வாழ்ந்த பூமியான ராமநாதபுரம், சிவகங்கை பகுதிகளின் மக்களைப் பற்றி சொல்வதால், இப்படத்திற்கு சேது பூமி என்று தலைப்பு வைத்தேன்.
பொதுவாக ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய பகுதி மக்களிடம் வறுமையும், கோபமும் தான் இருக்கும், அந்த கோபத்திற்கான நியாயம், அவர்களுடைய வாழ்க்கை முறை ஆகியவற்றை இப்படத்தின் மூலம் விவரிக்கிறோம்.
மனிதன் தனது உறவுகளையும் உணர்வுகளையும் கொஞ்சம் வேகமாகவே மறந்து வருவது இந்த சமூகத்திற்கு மிகப்பெரும் கேடு என்று கூறும் படமே சேது ‘சேது பூமி.
இந்த படத்தில் ஹீரோ வழக்கமான சினிமா ஹீரோ மாதிரி ஆடக் கூடாது. படிச்ச பையன் கிராமத்தில் உள்ளவன் எந்த அளவுக்கு ஆடுவான் அந்த அளவுக்கு தான் தமன் நடனம் ஆடுவார். இதை என்னுடைய கேமராமேன் அழகாக கேமராவில் ஒளிப்பதிவு செய்தார்.
அப்படி இந்தப் படத்துக்காக உருவான பாடல் தான் ‘ஏண்டீ சண்டாளி என்ன கொல்லுற …..என் நெஞ்ச பூப்போல ஏன் கிள்ளுற?’ என்ற பாடல் . இதன் வரிகள் அனைவரையும் நிச்சயம் கவரும்,” என்கிறார் .
படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை எப்படி எடுப்பது என்று இயக்குனருக்கும் சண்டை இயக்குனர் நாக்கவுட் நந்தாவுக்கும் பெரிய விவாதம் நடந்ததாம் . கடைசியில் சண்டை இயக்குனர் சொன்னபடியே எடுக்கப்பட்டதாம் .
“காரணம் அவர் வைத்த முதல் ஷாட் அவ்வளவு பிரம்மாதமாக இருந்தது . அப்புறம் அவர் இஷ்டத்துக்கே விட்டுட்டேன் ” என்கிறார் இயக்குனர் . அதுபோல அந்த சண்டைக்காட்சியில் ஹீரோ தமன் , வில்லன் ராஜலிங்கம் இருவரும் ஆக்ரோஷமாக நிஜ மோதல் போல மோதி நடித்தார்களாம் .
படம் பற்றிக் கூறும் தயாரிப்பாளர் எம்.ஏ.ஹபீப் , “சேது பூமி, கண்டிப்பாக ஒரு வெற்றி படம் தான். காதல்,ஆக்ஷன், காமெடி என்று மக்களுக்கு பிடித்த வகையில் முழுக்க முழுக்க கமர்ஷியலாக ஒரு நேர்மையான படத்தை நேர்மையான முறையில் தயாரித்துள்ள மகிழ்ச்சியோடு இருக்கிறேன்
இப்படத்தின் இயக்குனர் கேந்திரன் முனியசாமி, எனது பள்ளி நண்பனின் தம்பி. இவரை நான் ஒரு வேலைக்காக அழைத்த போது, அவர் ‘சினிமா தான் எனது மூச்சு, சினிமாவில் நான் வெற்றி பெற்றே தீருவேன்’ என்று என்னிடம் கூறினார். சரி தம்பிக்கு ஏதாவது ஒரு வழியில் நாம் உதவ வேண்டும். இப்படி சினிமாவுக்காக கஷ்ட்டப்படும் தம்பிக்கு உதவி செய்ய வேண்டும், என்ற நோக்கத்தில்தான் இந்த படத்தை தயாரித்தேன்” என்கிறார்
‘சேது பூமி’ வெளியீட்டுக்கு முன்பே தனது இரண்டாவது தயாரிப்பை ஹபீப் தொடங்கி விட்டார். ‘குரு பூஜை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பையும் உடனே தொடங்க அவர் ஆர்வம் காட்ட, இயக்குனர் கேந்திரன்தான், ‘சேது பூமி’ ரிலீசுக்கு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லி விட்டாராம்.
“ஆண்டுக்கு இரண்டு படங்கள் தயாரிக்கவும், புது புது இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் முடிவு செய்துள்ளேன். நான் மட்டும் இன்றி, எனது நண்பர்கள் சிலரையும் என்னுடன் இணைந்து படம் தயாரிக்க சொல்லுவேன்” என்கிறார் ஹபீப் , உற்சாகமாக .
இம்மாதம் ‘சேது பூமி’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

No comments:
Post a Comment