பிரசார் பாரதி பொதிகை தொலைக்காட்சியின் மண்டல
செய்திப்பிரிவில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள செய்தி
வாசிப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: செய்தி வாசிப்பாளர்
வயதுவரம்பு: 21 - 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தொழில் நுட்பத் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வழங்கிய இதழியல் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
பணி: செய்தியாளர்
வயதுவரம்பு: 25 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தொழில் நுட்பத் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வழங்கிய இதழியல் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: ஏதாவதொரு தொலைக்காட்சியில் அல்லது பத்திரிகை நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணியாற்ற அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: உதவி செய்தி ஆசிரியர்
வயதுவரம்பு: 25 - 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தொழில்நுட்பத் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் வழங்கிய இதழியல் பட்டம் அல்லது பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்: ஏதாவதொரு தொலைக்காட்ச்சியில் அல்லது பத்திரிகை நிறுவனத்தில் 2 ஆண்டுகள் பணியாற்ற அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தேர்வு
நிலை 3 நிலைகளைக் கொண்டது. பொது வாசிப்புத் தேர்வு, ஒளிபரப்பு நிலை
முகத்தோற்றத் தேர்வு மற்றும் நேர்காணல் (பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள்
உள்ளிட்டவற்றுக்கானது)
செய்தியாளர் மற்றும் உதவி செய்தித் தொகுப்பாசிரியர்
பதவிகளுக்கு நேர்காணல் (பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள்
உள்ளிட்டவற்றுக்கானது) மற்றும் மொழிபெயர்ப்புத் தேர்வு நடத்தப்படும்.
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு மாதத்தில், தேவையின் அடிப்படையில் அதிகபட்சமாக 7 நாட்கள் மட்டுமே பணி வாய்ப்பு தரப்படும்.
இந்த விளம்பரம் எவ்விதத்திலும் பணி உத்தரவாதம்
தரக்கூடியதல்ல, இந்தப் பணிகளுக்கான பட்டியலில் இடம்பெறுபவர்கள் தினக்கூலி,
தற்காலிக, நிரந்தரப் பணியாளர் போன்ற எவ்வித உரிமையும் கோர இயலாது.
அனைத்து நிபந்தனைகளும், விதிகளும் அவ்வப்போது மாறுதலுக்குட்பட்டவை.
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்,
அதற்கான விண்ணப்ப படிவத்தை
http://www.ddpodhigai.org.in/Forms/NewsReaderAPPLN15.pdf என்ற
இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அல்லது
தட்டச்சு செய்து. பூர்த்தி செய்து, தகுதிச் சான்றிதழ்களின்
சுயசான்றொப்பமிட்ட நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப
வேண்டும்.
ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிப்போர் தனித்தனி விண்ணப்பம் சமர்பிப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
தலைவர் (செய்திப்பிரிவு)
சென்னைத் தொலைக்காட்சி நிலையம்,
சுவாமி சிவானந்தா சாலை,
சென்னை - 600005
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.09.2015
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ddpodhigai.org.in/Forms/RNUADVT15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்
No comments:
Post a Comment