Monday, September 7, 2015

#‎எஸ்_எஸ்_ராஜேந்திரன்‬.

சேடப்பட்டி சூரியநாராயணா ராஜேந்திரன் என்பதன் சுருக்கமாக எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப்பட்டவர், பழம்பெரும் நடிகர் ‪#‎எஸ்_எஸ்_ராஜேந்திரன்‬.
தெளிவான தமிழ் உச்சரிப்புக்கு எடுத்து காட்டாக விளங்கிய எஸ்.எஸ்.ராஜேந்திரன், தேனிமாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள சேடப்பட்டி கிராமத்தில், 1928-ஆம் ஆண்டு பிறந்தார். 6-ஆம் வகுப்பு மாணவராக இருந்தபோதே, நாடகங்களில் நடித்து வந்தார். 15-வது வயதிலேயே புகழ்பெற்ற நாடக நடிகராக திகழ்ந்தார்.
1947-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகம் ஆன இவர், தொடக்க காலத்தில் சிறிய வேடங்களில் நடித்து வந்தார். 1952-ஆம் ஆண்டு கருணாநிதியின் கதை வசனத்தில் வெளியான, “பராசக்தி”யில் நடிகர் சிவாஜிகணேசனின் சகோதரனாக நடித்து புகழ் பெற்றார்.
இதன் பின்னர், 1957-ல் வெளியான “முதலாளி” திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற “ஏரிக்கரையின் மேலே போறவளே பெண் மயிலே” என்ற பாடல், ரசிகர்களிடேயே பெரும் வரவேற்பை பெற்றது.
இதன் பின்னர், அவர் கதாநாயகனாக நடித்த பல படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றன. 1958-ல் இவர் நடித்த “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற படம் மிகப் பெரிய வெற்றியை தேடித் தந்தது. எம்ஜிஆரின் நெருங்கிய நண்பரான இவர், அவருடன் “ராஜா தேசிங்கு”, “காஞ்சித் தலைவன்” உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். எனினும் நடிகர் சிவாஜிகணேசனுடன்தான் அதிகப் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்.
“லட்சிய நடிகர்” எனவும் புகழப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, திமுகவில் இணைந்த அவர், 1962-ஆம் ஆண்டு தேனி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ‪#‎இந்தியாவிலேயே_திரைப்பட_நடிகராக_இருந்து_அரசியலில்‬ களமிறங்கி, ‪#‎சட்டப்பேரவை_உறுப்பினராக‬ தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நபர் ‪#‎எஸ்_எஸ்_ராஜேந்திரன்தான்‬.

No comments: