Friday, March 27, 2020

1955 - ல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் ஐயா பொதுக்கூட்டத்தில் பேசியது

அக்காலத்தில் இருந்து காலையில் முற்றத்தில் சாணம் தெளிப்பது என்ற பழக்கத்தைக் கையாண்டு வந்திருக்கிறார்கள். இதன் நியாயம் இன்னதெனத் தெரியாத ஆங்கிலேயர்கள் இது அநாவசியமெனக் கருதினார்கள். ஆங்கிலம் படித்த இந்தியர்களும் அதைப்பின் பற்றினார்கள்.
தற்போது விஞ்ஞானம் என்ன சொல்லுகிறது? சூரியன் உதயமானபின் ஏற்படுகிற உஷ்ணத்தால் பூமியிலிருந்து விஷக் கிருமிகள் உற்பத்தியாகி மூன்றடிக்குக் கீழ்ப்பட்ட உயரத்தில் சஞ்சரிக்கிறது. அது வீட்டின் வாயிலில் நுழைந்தால் மக்களின் சுவாசத்தில் புகுந்து நோயை உண்டாக்கும். அதைத் தடுப்பதற்கு பினாயில் தெளித்தால் அவைகள் அத்தனையும் அழிந்து போகும். பினாயிலுக்குள்ள குணம் இந்தியர்கள் கையாண்டு வருகிற சாணத்திற்கும் இருக்கிறது என்று சொல்கிறது.
பினாயில் வாசனை வீசும் காசுக்கு வாங்க வேண்டும். சாணத்திற்கு இது இரண்டும் கிடையாது. சும்மாவும் கிடைக்கும். சுகாதாரமும் கூட இம்மாதிரி நடைப் பழக்கத்திலுள்ள பல சான்றுகள் காணக்கிடக்கின்றன சரித்திரத்தில் பிற்கால நாகரிகத்தில் அத்தனையும் வியாதிகளை விருத்தி செய்யும் என்றார்...
பசும்பொன் ஸ்ரீ முத்துராமலிங்க தேவர்

No comments: