*தயவு செய்து கவனம் செலுத்தவும்....*
*மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாண்புமிகு அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களுக்கு கனிவான வேண்டுகோள்...*
*கொடூர உயிர்க்கொல்லி வைரஸ் ஆன கொரானாவை தமிழக்த்தை விட்டு ஒழிக்க நீங்கள் எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளையும் பாராட்டி வரவேற்கிறேன்*
*அதே நேரம்...*
*இந்த வைரஸ் தொற்றை குணமாக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என சொல்கிறார்கள்*.
*ஆனால்...*
*சித்த மருத்துவர் திரு.தணிகாசலம் என்பவர் தன்னிடம் கொரானாவை ஒழிக்கும் மருந்து இருப்பதாக பல நாட்களாக கூறி வருகிறார்*.
*இந்த வைரஸ் தோன்றிய சீனாவே இவரின் மருந்து விவரங்களை பெற்று பயன்படுத்தியதாக வீடியோ வெளியிடுகிறார். சீன தூதர் இவரது ஆஸ்பத்திரி சென்று சந்தித்து பேசியதாக சொல்கிறார்*.
*போதா குறைக்கு "வாதசுர குடிநீர்" என ஒரு மருந்தை பயன்படுத்த சொல்கிறார். ஏற்கனவே டெங்கு காய்ச்சல் நேரத்தில் இதே போல "நிலவேம்பு" குடிநீர் சித்தாவில் இருந்து தான் மக்களை காப்பாற்றியது*.
*கொரானா நோயாளிகளை குணப்படுத்தாமல் போனால் தன்னை தூக்கில் போடும்படி அறை கூவல் விடுக்கிறார்*.
*சமூக வலை தளத்தில் அரசையோ, முதல்வரையோ, அமைச்சர்களையோ தவறாக சித்தரித்து பதிவு போட்டால் உடனே நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட நபரை பிடிக்கிறீர்கள்*.
*ஒரு பேராபத்து வந்திருக்கிறது அதில் இருந்து தமிழக மக்களை காக்க நான் ரெடி என சொல்லும் நபரை பிடித்து உண்மையான நிலையை அரசு ஏன் தெளிவு படுத்த கூடாது*.
*ஒருவேளை திருத்தணிகாசலம் வைத்திருக்கும் மருந்து நிஜத்தில் கொரானாவை கொன்றழித்தால் இந்த உலகத்துக்கே புத்துயிர் கொடுத்த அரசாங்கம் என உங்களை உலக மக்கள் ஆராதிக்க மாட்டார்களா*...
*அல்லது*...
*அவர் சொல்வது தவறு என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே*...
*தயவு செய்து முதல்வர் அவர்களும், சுகாதார துறை அமைச்சர் அவர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்*.
*கோடங்கி @ ஆபிரகாம் லிங்கன்
Kodanki.in மூத்த செய்தியாளர்,
News 7 Tamil திரை விமர்சகர்.
News 7 Tamil திரை விமர்சகர்.
No comments:
Post a Comment